கார்த்தியின் 'ஜப்பான்' படம்: சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!

கார்த்தி நடிப்பில் ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாகும் ’ஜப்பான்’ என்ற திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு தொடங்கியது என்பதையும் பார்த்தோம்.

கார்த்தி ஜோடியாக அனுகீர்த்தி வாஸ் நடிக்க இருக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார் என்பதும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் அறிவிப்பை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சற்றுமுன் வெளியிட்டுள்ளது.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் ஜனவரி நவம்பர் 14-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கார்த்தி ரசிகர்கள் மிகப்பெரிய ஆவலுடன் இந்த போஸ்டரை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ரவி வர்மன் ஒளிப்பதிவில் பிலோமின்ராஜ் படத்தொகுப்பில் அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில் இந்த படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.

More News

வீட்டிற்குள் 2 அடியில் தண்ணீர்: இசையமைப்பாளரின் புகாருக்கு தமிழக அமைச்சரின் பதில்!

 சென்னையில் பெய்த கனமழை காரணமாக தனது வீட்டிற்குள் மழைநீர் புகுந்து விட்டது என்றும் இரண்டு அடிக்கு மேல் தண்ணீர் உள்ளது என்றும் பிரபல இசையமைப்பாளர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில்

ஜிலேபி கொடுத்த நபர் குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவு செய்த சமந்தா: வைரல் வீடியோ

 நடிகை சமந்தா தனக்கு ஜிலேபி குறித்த நபர் குறித்த புகைப்படத்தை வெளியிட்டு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ள நிலையில் அவை வைரலாகி வருகின்றன. 

சூரியனுக்கு அருகில் இருப்பது போல் இருந்தது: ரஜினியை சந்தித்த 'லவ் டுடே' இயக்குனரின் பதிவு

 சூரியனுக்கு அருகே இருப்பது போல் இருந்தது என சூப்பர்ஸ்டார் ரஜினியை சந்தித்த பின்னர் 'லவ்டுடே' இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நல்லவர் என்ற முகமூடி அணிந்திருப்பவர் யார்? மணிகண்டன் பதிலை கேட்டு ஆச்சரியமடைந்த கமல்!

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில் தற்போது தான் நிகழ்ச்சி விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளது என்பதும், போட்டியாளர்கள் தற்போது தங்களது உண்மையான முகத்தை

'ஜப்பான்' நான் இயக்க இருந்த படம்: பிரபல இயக்குனரின் பதிவு!

கார்த்தி நடிப்பில் ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாகயிருக்கும் திரைப்படத்திற்கு 'ஜப்பான்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும்