தீபாவளி ரேஸில் இருந்து விலகுகிறதா கார்த்தியின் 'ஜப்பான்'?

  • IndiaGlitz, [Tuesday,May 16 2023]

கார்த்தியின் ‘ஜப்பான்’ உட்பட நான்கு பிரபல நடிகர்களின் திரைப்படங்கள் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தீபாவளி ரேஸில் இருந்து ‘ஜப்பான்’ திரைப்படம் விலகி முன்கூட்டியே வெளியாக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி அன்று பிரபல நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் என்பது தெரிந்ததே. ஆனால் இந்த ஆண்டு ரஜினி, கமல், அஜித், விஜய் ஆகிய முக்கிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் தீபாவளிக்கு வெளியாகவில்லை.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடித்த ’அயலான்’ மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ’ஜிகர்தண்டா 2’ஆகிய இரண்டு திரைப்படங்கள் தீபாவளி அன்று வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனுஷின் ’கேப்டன் மில்லர்’ மற்றும் கார்த்தி நடித்த ‘ஜப்பான்’ ஆகிய திரைப்படங்கள் தீபாவளிக்கு வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தற்போது ’ஜப்பான்’ செப்டம்பர் மாதமே வெளியாக இருப்பதாகவும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

கார்த்தி, அனு இமானுவேல், சுனில் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜப்பான்’ திரைப்படத்தை ராஜூ முருகன் இயக்கி வருகிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாக உள்ளது. ஜிவி பிரகாஷ் இசையில், ரவிவர்மன் ஒளிப்பதிவில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், அன்பறிவு ஸ்டாண்ட் இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

கார்த்தியின் 25வது படமான இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுக்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.