கார்த்தியின் 'ஜப்பான்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு.. மாஸ் தகவல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
கார்த்தி நடித்து வரும் ‘ஜப்பான்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு சென்னையில் ஜூன் 2ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கார்த்தி நடிப்பில் ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜப்பான்’. இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக அனு இம்மானுவேல் நடித்து வருகிறார் என்பதும் மேலும் இந்த படத்தில் விஜய் மில்டன், சுனில் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர் என்பதும் தெரிந்தது.
சமீபத்தில் இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் என மாற்றப்பட்ட நிலையில் இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஜூன் 21ஆம் தேதி முதல் ஈவிபி ஸ்டுடியோவில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த படப்பிடிப்பு 25 நாள் நடைபெறும் என்றும் இந்த படத்திற்காக பிரம்மாண்டமாக செட் அமைக்கும் பணி சமீபத்தில் தான் முடிவடைந்தது என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் 25 நாள் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததும் ஒரு பக்கம் புரமோஷன் பணிகளையும் இன்னொரு பக்கம் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளையும் செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
‘ஜப்பான்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் கார்த்தி, நலன் குமாரசாமி இயக்க இருக்கும் தனது 26 வது படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments