ஆண்டவனின் அதிசய படைப்பில் அவன் ஒரு ஹீரோ.. 'ஜப்பான்' இண்ட்ரோ வீடியோ..!

  • IndiaGlitz, [Thursday,May 25 2023]

கார்த்தி நடித்து முடித்துள்ள ‘ஜப்பான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பதும் அது குறித்த போஸ்டர் வைரலானது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இன்று கார்த்தியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ‘ஜப்பான்’ படத்தின் இண்ட்ரோ வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் கார்த்தியின் கேரக்டர் மற்றும் அவரது மாஸ் காட்சிகள் உள்ளன என்பதும் கார்த்தியின் ரசிகர்களுக்கு இந்த வீடியோ மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

'ஆண்டவனை அதிசய படைப்புகளில் அவன் ஒரு ஹீரோ’ மற்றும் ‘நீங்க நினைக்கிற மாதிரி இல்லம் அவன் ஒரு டர்ட்டி வில்லன்’ போன்ற வசனங்கள் கார்த்தியின் கேரக்டரை பில்டப் செய்கின்றன. இயக்குனர் ராஜூ முருகனின் வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்த படம் நிச்சயம் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கார்த்தி, அனு இமானுவேல், சுனில் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜப்பான்’ திரைப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாக உள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், அன்பறிவு ஸ்டாண்ட் இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

கார்த்தியின் 25வது படமான இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

என்ன சிம்ரன் இதெல்லாம்? திடீரென ஹாட் புகைப்படம் வெளியிட்ட இளம் நடிகையால் ரசிகர்கள் அதிர்ச்சி!

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகை ஒருவர் தற்போது சினிமாவில் நடித்துவரும் நிலையில் அவர் திடீரென கவர்ச்சியான உடையணிந்து புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

ஆதி குணசேகரனுக்கு தெரிஞ்சா? 40 வயது நடிகையின் நீச்சல் உடை வீடியோவை பார்த்து கதறும் ரசிகர்கள்!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று தென்னிந்திய சினிமாவில் ஹீரோயினாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றிருக்கும் நடிகை கனிகா

சிப் லைனில் சாகச பயணம் செய்த சூரி.. ஹீரோக்கள் கூட இதை செய்வார்களா? வைரல் வீடியோ..!

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான  சூரி   தற்போது ஹீரோவாகவும் சில படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பாக அவர் முக்கிய வேடத்தில் நடித்த 'விடுதலை' திரைப்படம் மிகப்பெரிய

நேர்ல போய் கத்தி இருந்தாலும் இந்த மகிழ்ச்சி வந்துருக்காது: தோனி என்ட்ரி குறித்து அருண்ராஜா காமராஜ்..!

சமீபத்தில் சிஎஸ்கே மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற குவாலிஃபையர் 1 போட்டியில் தல தோனி பேட்டிங் செய்ய களமிறங்கிய போது பின்னணியில் ஒலித்த பாடல்

இயக்குனராகிறார் கீர்த்தி சுரேஷ் சகோதரி.. டைட்டில் போஸ்டர் ரிலீஸ்..!

 நடிகை கீர்த்தி சுரேஷ் சகோதரி இயக்குனராகி இருப்பதை அடுத்து அது குறித்த போஸ்டர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.