சுருண்ட பாம்பு, கையில் துப்பாக்கி.. 'ஜப்பான்' ஃபர்ஸ்ட்லுக்கிற்கே ஒரு முன்னோட்டம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கார்த்தி நடித்த ’விருமன்’, ‘பொன்னியின் செல்வன்’ மற்றும் ’சர்தார்’ ஆகிய மூன்று திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் குறிப்பாக ’சர்தார்’ திரைப்படம் வெளியாகி இன்று 25வது நாள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது ராஜுமுருகன் இயக்கி வரும் ’ஜப்பான்’ என்ற திரைப்படத்தில் நடிகர் கார்த்தி நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜீவி பிரகாஷின் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே தகவல் வெளியானது என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு ஒரு முன்னோட்டம் தரும் வகையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரின் பாதி அளவு வெளியாகி உள்ளது. அதில் சுருண்டிருக்கும் பாம்பு மற்றும் துப்பாக்கியுடன் இருக்கும் கை ஒன்று தெரிகிறது. இதனை அடுத்து இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ரவிவர்மன் ஒளிப்பதிவில், பிலோமின்ராஜ் படத்தொகுப்பில் அன்பறிவ் ஸ்டண்ட் பயிற்சியில் உருவாகி வரும் இந்த படம் கார்த்தியின் 25வது படம் என்பதால் அவரது ஸ்பெஷல் படமாக இருக்கும் என பார்க்கப்படுகிறது.
Get Ready for the Enthralling First Look of #Karthi in & as #Japan from Today at 5 pm!#Karthi25 #JapanFirstLook@Karthi_Offl @Mee_Sunil @dop_ravivarman #Banglan @YugabhaarathiYB @Dir_Rajumurugan @prabhu_sr @DreamWarriorpic @JapanTheMovie#JapanFirstLookFromToday pic.twitter.com/1LXHmH0PJO
— G.V.Prakash Kumar (@gvprakash) November 14, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout