கார்த்தியின் 'தேவ்' படப்பிடிப்பு திடீர் ரத்து: ரூ.1.5 கோடி நஷ்டம்
Send us your feedback to audioarticles@vaarta.com
'கடைக்குட்டி சிங்கம்' படத்தை அடுத்து கார்த்தி தற்போது 'தேவ்' என்ற படத்தில் நடித்து வருகிறார். ரஜத் ரவிசங்கர் இயக்கி வரும் இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரித்திசிங் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு குலுமணாலியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் குலுமணாலியில் திடீரென பெய்த கனமழையால் அப்பகுதில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்பு தடைபட்டதோடு படக்குழுவினர்களுக்கு ஆபத்தும் ஏற்பட்டுள்ளது,
இதுகுறித்து கார்த்தி கூறியதாவது: தேவ் படத்தின் படப்பிடிப்பை குலு மணாலியில் அழகிய மழை மற்றும் பனிச்சாரலுக்கு நடுவே படம்பிடிக்கலாம் என்று முடிவு செய்திருந்தோம். ஆனால் திடீரென்று நேற்று நிலைமை மிகவும் மோசமானது. வெள்ளம் மற்றும் நில சரிவு ஏற்பட்டு. கார் , பஸ் மற்றும் பல பொருட்களை அடித்து சென்றது. நிலச்சரிவினால் பாறைகள் உருண்டு வந்ததை நானே கண்டேன். வேகமாக வந்த வெள்ளம் சின்ன சின்ன பாறைகளை அடித்து வந்தது. இந்த பதற்றமான சூழ்நிலையை பார்க்கும் போது ஒரு நிமிடம் உயிரே போய் வந்தது போல் இருந்தது. இதனால் படப்பிடிப்புக்கு காரில் சென்றுக்கொண்டிருக்கும் போது கடுமையான டிராபிக் ஏற்பட்டது. இதனால் ரோட்டில் சென்ற கார்களும் நகரவே இல்லை. 4-5 மணி நேரம் நான் காரியிலேயே இருக்க வேண்டிய ஒரு நிலைமை ஏற்பட்டது. பிறகு அருகில் இருந்த கிராமத்துக்கு சென்று தங்க ஏற்பாடு செய்யப்பட்டு அங்கே தங்கியிருக்கிறேன். ஆனால் எங்கள் படக்குழுவினர் 140 பேரை நினைத்தால் தான் வருத்தமாக உள்ளது. அவர்கள் எங்கே தங்குவர்கள், சாப்பிடுவார்கள் எப்படி கீழே இறங்குவார்கள் என்று வருத்தமாக உள்ளது.
23 வருடங்களுக்கு பிறகு ஏற்பட்டுள்ள இந்த நிலச்சரிவால் மக்கள் பயன்படுத்தி வந்த பாதைகளுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் அந்த பாதைகள் சரி செய்யப்பட கண்டிப்பாக 28 மணி நேரம் தேவைப்படும் என்றும். அது வரை படக்குழுவினாரால் கீழே இறங்க முடியாது என்று கூறியுள்ளார்.
. @Karthi_Offl #Dev crew affected due 2 #HimachalRains causing landslides, floods n more damage.Nearly140 crewmembers got alienated on mountain top without communication.Even food seems to b an issue there.Will minimum 28hrs to clear road fr them to come down. @PrincePictures_ pic.twitter.com/cQHiXh5jQc
— Johnson PRO (@johnsoncinepro) September 24, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout