கார்த்தியின் 'தேவ்' குறித்த லேட்டஸ்ட் அப்டேட்

  • IndiaGlitz, [Friday,June 01 2018]

'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தை அடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வந்த 'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கார்த்தி தற்போது ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் 'தேவ்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை 'சிங்கம் 2' , 'மோகினி' ஆகிய படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது

முழுக்க முழுக்க ஆக்சன் படமாக உருவாகி வரும் இப்படத்தை தயாரிப்பாளர் S. லக்ஷ்மன் எந்தவித சமரசமுமின்றி 55 கோடி ரூபாய் பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக தயாரித்து வருகிறார். ஆக்சன் , காமெடி , அட்வென்ஜர் கலந்து உருவாகும் இப்படத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்பு சென்னையில் விரைவில் துவங்க உள்ளது.

இன்று முதல் இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெறவுள்ளது. விறுவிறுப்பான கார் சேசிங் மற்றும் பாடல் காட்சிகள் இங்கே படமாக்கப்படவுள்ளன. இதை தொடர்ந்து அதிரடி சண்டை காட்சிகள் இமாலய மலைகளிலும் , மும்பை மற்றும் ஐரோப்பாவிலும் படமாக்கப்படவுள்ளன. மேலும் அமெரிக்காவில் உள்ள மிகவும் அழகான லொகேஷன்களில் இப்படம் படமாக்கப்படவுள்ளது.

கார்த்தியின் ஸ்டைலிஷான லுக் மற்றும் மாஸான தோற்றம் படத்தில் புதுமையான ஒரு விஷயமாக இருக்கும். ரகுல் ப்ரீத் சிங் , பிரகாஷ் ராஜ் , ரம்யா கிருஷ்ணன் , அம்ருதா , விக்னேஷ் , ரவி மற்றும் சிறப்பு வேடத்தில் கார்த்திக் நடிக்கிறார்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவும் ரூபன்.எடிட்டிங் பணியும் செய்யவுள்ளனர்

More News

அஜித், விஜய், விஜய்சேதுபதியை கலாய்க்கும் 'தமிழ்ப்படம்'

நடிகர் சிவா நடிப்பில் சி.எஸ்.அமுதன் இயக்கிய 'தமிழ்ப்படம்' நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகமான 'தமிழ்ப்படம் 2.0' திரைப்படம் தற்போது தயாராகி

அதர்வாவின் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு

அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள 'செம போத ஆகாதே' திரைப்படம் வரும் ஜூன் 14ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அதர்வா தற்போது நயன்தாராவுடன்  'இமைக்கா நொடிகள்' என்ற படம் உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.

பத்திரிகையாளர்களிடம் வருத்தம் தெரிவித்த ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் நேற்று தூத்துகுடிக்கு சென்று துப்பாக்கி சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் தூத்துகுடியிலும் சென்னையிலும் செய்தியாளர்களை சந்தித்தார்.

ரஜினி கடைசி மூச்சு வரை கன்னடராக இருக்க வேண்டும்: கர்நாடக எம்.எல்.ஏ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் கர்நாடகாவில் வெளியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் பிறப்பால் கன்னடராக இருந்தாலும்,

தவறான மனிதர்களை அடையாளம் காட்டிய காலச்சூழல்: ரஜினி குறித்து பாமக ராமதாஸ்

நேற்று தூத்துகுடி சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த் எதற்கெடுத்தாலும் போராட வேண்டாம் என்றும், போராடும்போது பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும்,