கார்த்தியின் 'தேவ்' இசை வெளியீடு தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,December 25 2018]

'தீரன் அதிகாரம் ஒன்று', 'கடைக்குட்டி சிங்கம்' ஆகிய இரண்டு வெற்றி படங்களை அடுத்து கார்த்தி நடித்து வரும் திரைப்படம் 'தேவ்'. இந்த படத்தின் சிங்கிள் பாடலான 'அனங்கே சிணுங்கலாமா? நெருங்கி அணைக்கலாமா' என்ற பாடல் சமீபத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆனது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தின் அனைத்து பாடல்களும் வரும் 29ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் அமைந்துள்ள இந்த பாடல் பெரும் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கார்த்தி, ரகுல் ப்ரீத்திசிங், பிரகாஷ்ராஜ், ரம்யாகிருஷ்ணன், விக்னேஷ், அம்ருதா, நிக்கி கல்ராணி, ரேணுகா, வம்சி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை ரஜத் ரவிசங்கர் இயக்கியுள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

More News

எம்.எல்.ஏ மீது நடிகை போலீஸ் புகார்

தெலுங்கு நடிகை அபூர்வா, தெலுங்கு தேச எம்.எல்.ஏ ஒருவர் மீது புகார் அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மக்கள் திலகம் எம்ஜிஆர் குறித்து அரிய தகவல்கள்: நடிகர் ராஜேஷ்

மக்கள் திலகம் எம்ஜிஆர் நினைவு தினம் நேற்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்ட நிலையில் நடிகர் ராஜேஷ், எம்ஜிஆர் குறித்த சில அரிய தகவல்களை கூறியுள்ளார்.

துருவ் விக்ரமின் 'வர்மா' ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சீயான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் இயக்குனர் பாலா இயக்கிய 'வர்மா' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.

தமிழ் மட்டும் வெள்ளக்காரன் மொழியா இருந்திருந்தா?...'ழகரம்' டிரைலர் விமர்சனம்

ஈரம், அதிதி, அனந்தபுரத்து வீடு உள்பட பல திரைப்படங்களில் நாயகனாக நடித்த நடிகர் நந்தா ஹீரோவாக மீண்டும் நடித்து வரும் திரைப்படம் 'ழகரம்'. தமிழுக்கு மட்டுமே சிறப்பு எழுத்தாக இருக்கும்

விஜய்சேதுபதியிடம் வாழ்த்து பெற்ற நந்திதா-நர்மாதா

விஜய்சேதுபதியுடன் 'இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா' மற்றும் 'இடம் பொருள் ஏவல்' ஆகிய படங்களில் நடித்த நடிகை நந்திதா தற்போது 'நர்மதா' என்ற படத்தில் நடித்து வருகிறார்.