கார்த்தியின் அடுத்த பட அறிவிப்பு.. இயக்குனர் இந்த பிரபல நடிகரா?
Send us your feedback to audioarticles@vaarta.com
கார்த்தி நடித்துள்ள ’மெய்யழகன்’ என்ற திரைப்படம் விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு போஸ்டருடன் வெளியானதை அடுத்து இந்த தகவல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்தி தற்போது ’96’ பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் உருவாகிய ’மெய்யழகன்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் 27ஆம் தேதி வெளியாகவுள்ளது.
மேலும் அவர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி வரும் ’வா வாத்தியாரே’ மற்றும் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’சர்தார் 2’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கார்த்தி நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படம் ’கார்த்தி 29’ படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த படத்தை இயக்குனர் தமிழ் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரை உலகின் வில்லன் மற்றும் குணசேத்திர கேரக்டரில் நடித்த தமிழ், விக்ரம் பிரபு நடித்த ’டாணாக்கார்ன்’ என்ற படத்தை இயக்கி உள்ளார் என்பதும் இதையடுத்து அவர் இயக்கும் அடுத்த படம் ’கார்த்தி 29’ என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் அட்டகாசமான போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
A new chapter begins with #Karthi29! We’re excited to bring this special film to life, starring the incredible @Karthi_Offl! More surprises await! ✨#Karthi @directortamil77 @prabhu_sr @B4UMotionPics @ivyofficial2023 #IshanSaksena @RajaS_official @SunilOfficial pic.twitter.com/yBeluLxIzo
— DreamWarriorPictures (@DreamWarriorpic) September 15, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com