நயன்தாராவை நான் காதலிக்கவில்லை

  • IndiaGlitz, [Thursday,October 13 2016]

கார்த்தி மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ள 'காஷ்மோரா' திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த படத்தில் இன்றைய கோலிவுட்டின் முன்னணி நாயகிகளான நயன்தாரா, ராணி ரத்தினம்மா தேவி கேரக்டரிலும், ஸ்ரீதிவ்யா, ஆராய்ச்சியாளர் வேடத்திலும் நடித்துள்ளனர். ஆனால் கார்த்திக்கும் இந்த இரண்டு ஹீரோயின்களுக்கும் இடையே ரொமான்ஸ் காட்சிகளே இல்லையாம். இந்த தகவலை கார்த்தி நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளார்.
இந்த படம் பிரமாண்டமான செட்களில் ஆக்சன், ஹாரர், காமெடி காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளதாகவும், ரொமான்ஸ் இல்லாத குறையே தெரியாமல் படம் விறுவிறுப்பாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.