close
Choose your channels

'மார்க் ஆண்டனி' படத்தில் கார்த்தி.. என்ன செய்திருக்கிறார் தெரியுமா?

Sunday, September 10, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால் மற்றும் எஸ்ஜே. சூர்யா நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில் உருவான ’மார்க் ஆண்டனி’ திரைப்படம் வரும் வெள்ளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இறுதிக்கட்ட புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் கார்த்தி பணிபுரிந்து இருந்ததாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ’மார்க் ஆண்டனி’ படத்தின் தொடக்கத்தில் இந்த படத்தின் கதையை சுருக்கமாக கூறும் வகையில் கார்த்தி குரல் கொடுத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் கமல்ஹாசன் குரல் கொடுத்தது போல் கார்த்தி குரல் கொடுத்திருப்பதாகவும், அவரது டப்பிங் பணியும் முடிந்து விட்டதாக தெரிகிறது.

மேலும் எஸ்ஜே சூர்யா தனது கேரக்டருக்காக 22 மணி நேரம் தொடர்ச்சியாக ஓய்வு எடுக்காமல் டப்பிங் செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் சில்க் ஸ்மிதா காட்சி வித்தியாசமாக இருக்கும் என்றும் இந்த படம் திரையரங்குகளில் பார்ப்பவர்களுக்கு நல்ல அனுபவம் மற்றும் ஆக்சன் விருந்தாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

டைம் டிராவல் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் விஷால், எஸ்ஜே சூர்யா, சுனில், செல்வராகவன், ரிதுவர்மா, அபிநயா, ஒய்ஜி மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வினோத்குமார் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment