ரியல் போலீசுக்கு ரீல் போலீஸ் வழங்கிய நிதியுதவி
- IndiaGlitz, [Monday,March 19 2018]
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் நடந்த ஒருசில சம்பவங்கள்ல் காவல்துறையின் மீது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தாலும், காவல்துறை என்பது மக்களின் சேவையை அடிப்படையாக கொண்ட ஒரு புனிதமான பணி. கார்த்தி நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் மூலம் காவல்துறையினர் மக்களின் பாதுகாப்புக்காக எடுத்த ரிஸ்க்குகள் விரிவாக காட்டப்பட்டிருந்தது. இந்த படம் காவல்துறையினர்களின் மீது ஒரு மதிப்பையும் மரியாதையையும் வரவழைத்தது
இந்த நிலையில் கோவையில் முன்னாள் காவல்துறை அதிகாரிகள் பொதுநல அறக்கட்டளை துவக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் கார்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரூ.10 லட்சம் நிதியுதவி செய்தார். பின்னர் அவர் பேசியதாவது:
சம்பளத்துக்காக இல்லாமல், மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணம் இருந்தால் தான் காவல்துறை பணிசெய்ய முடியும். ‘நேர்மையாக உழைத்ததுக்கு இந்த சமூகம் என்ன செய்து விட்டது?’ என்று பாதிக்கப்பட்ட குடும்பத்துக்குத் தோன்றிவிடக் கூடாது. நேர்மையான அதிகாரிகள் தைரியமாக இருப்பதற்கு இதுபோன்ற அறக்கட்டளைகள் அவசியம் தேவை' என்று கூறினார்