ஃபெஞ்சல் புயல் பாதிப்பு: துணை முதல்வர் உதயநிதியிடம் கார்த்தி கொடுத்த நிவாரண நிதி..!

  • IndiaGlitz, [Sunday,December 08 2024]

நடிகர் கார்த்தி அவர்கள், ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்திய பெரும் பாதிப்பால் அவதிப்படும் மக்களின் நிவாரணத்திற்காக, 15 லட்சம் ரூபாயை துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் வழங்கினார். இதுகுறித்து கார்த்தி கூறியதாவது:

ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த வரலாறு காணாத மழையால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இப்பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களுக்கும் எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

குறிப்பாக, தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் முதன்மையான தொழிலாக விவசாயம் உள்ளதால் இப்புயலில் விவசாயிகள் பெரும்பான்மையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஊடகங்களில் வெளிவரும் செய்திகளைவிட கள நிலவரம் மிக மிக மோசமானதாக உள்ளது.

விவசாயிகளை காப்பாற்றும் கால்நடைகள், வீடுகள், அறுவடைக்கு தயாராக இருந்த பல ஆயிரம் ஏக்கர் பயிர்கள், ஆயிரக்கணக்கான கிணறுகள், ஆழ்துளை கிணறுகள், மோட்டார்கள். இன்னும் பிற உடைமைகள் என அனைத்தும் ஒரே இரவில் நாசமாகியுள்ளன. விவசாயத்திற்கு தேவைப்படும் மொத்த அமைப்பும் ஒரே இரவில் சீர்குலைந்துள்ளது.

ஏற்கனவே தங்கள் விளை பொருட்களுக்கு உரிய விலை இல்லாமல் தங்கள் உழைப்பை கொடுத்து வரும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மொத்தமாக இப்புயல் புரட்டி போட்டுள்ளது. இந்நேரத்தில் மத்திய மாநில அரசுகள் நிவாரணப் பணிகளை விரைவாக மேற்கொள்வதோடு, பாதிக்கப்பட்ட விவசாயிகளின் விளைபொருட்களை, கால்நடைகள் மற்றும் உடைமைகளுக்கு உரிய மதிப்பீட்டை ஆராய்ந்து இழப்பீட்டை வெகு விரைவாக வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மொத்த வாழ்வாதாரத்தையும் இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு இந்த இழப்பீடு மட்டுமே அவர்களின் ஒரே நம்பிக்கையான விவசாயத்தையும், அதற்கான பிற பணிகளையும் மீண்டும் தொடங்க பெருந்துணையாக இருக்கும்.

எனவே மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் இழப்புகளை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விவசாயிகளின் சார்பாக அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இதற்கு முதல் படியாக என் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 15 லட்சம் நிவாரணத் தொகையாக அளிக்கிறேன்.

More News

அது மட்டும் நடந்தால் விஜய் வாயில் சர்க்கரை போடுவேன்: நடிகை கஸ்தூரி

திமுக கூட்டணி மைனஸ் ஆகும் என்று விஜய் சொன்னது மட்டும் நடந்தால் அவரது வாயில் சர்க்கரை போடுவேன் என்று நடிகை கஸ்தூரி சமீபத்தில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.

உலகின் தலைசிறந்த வாட்ச் மேக்கரை சந்தித்த தனுஷ்.. வைரல் புகைப்படம்..!

உலகின் தலைசிறந்த  சுவிஸ் நாட்டை சேர்ந்த வாட்ச் மேக்கரை இங்கிலாந்து நாட்டில் நடிகர் தனுஷ் சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

'விடாமுயற்சி' ரிலீஸ் தேதியை உறுதி செய்த சுரேஷ் சந்திரா.. குஷியில் ரசிகர்கள்..!

அஜித் நடித்து வரும் 'விடாமுயற்சி'  படத்தின் ரிலீஸ் தேதியை அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா உறுதி செய்துள்ள நிலையில், ரசிகர்கள் உற்சாகம் ஆகியுள்ளனர்.

என் ஆயுள் ரேகை நீயடி.. சைந்தவியுடன் மீண்டும் இணைந்த ஜிவி பிரகாஷ்..!

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி ஆகிய இருவரும் பிரிவதாக சமீபத்தில் அறிவித்த நிலையில், விவாகரத்து அறிவிப்புக்கு பின்னர் மீண்டும் இணைந்து

நடிகர் காளிதாஸ் ஜெயராம் திருமணம்.. தமிழ்நாட்டின் ஜமீன் வீட்டு பெண் தான் மணமகளா?

பிரபல நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் ஜெயராம் திருமணம் இன்று நடைபெற்ற நிலையில், அவரை திருமணம் செய்து கொண்டவர் தமிழ்நாட்டின் ஜமீன் வீட்டு பெண் என்று கூறப்படுவது