அரசு பேருந்தில்தான் கல்லூரி காலத்தை கழித்தேன்… முன்னணி நடிகர் பதிவிட்ட வைரல் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் கார்த்திக் தன்னுடைய கல்லூரி காலத்து புகைப்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அதில் பழைய அரசு பேருந்தான பல்லவன் பேருந்தில் நடிகர் கார்த்திக் தன்னுடைய நண்பர்களுடன் அமர்ந்து இருக்கிறார். இந்தப் புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிக லைக்குகளை பெற்று வைரலாகி வருகிறது.
சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் ஆரம்பக் காலத்தில் பல்லவன் என்ற பெயரில்தான் இயங்கியது. இந்தப் பேருந்தில் தன்னுடைய கல்லூரி நாட்களை கழித்ததாகக் கூறியுள்ள நடிகர் கார்த்திக், அந்த நாட்கள் உண்மையான நட்புகளுடன் இனிமையாக கழிந்தது என்றும் குறிப்பிட்டு உள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் கடும் வைரலாகி வருகிறது.
நடிகர் சிவக்குமாரின் மகனும் நடிகர் சூர்யாவின் தம்பியுமான நடிகர் கார்த்திக் முதன் முதலாக தமிழில “பருத்திவீரன்“ படத்தில் அறிமுகமானார். அந்தப் படம் சூப்பர் டூபபர் ஹிட் அடித்த நிலையில் தற்போது பல வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான “கைதி“ படமும் பெரிய அளவில் வெற்றிப்பெற்றது. தற்போது “ரெமோ“ படத்தின் இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் இவர் நடித்துள்ள “சுல்தான்” வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தப் படத்தில் இளம் நடிகை ராஷ்மிகா தமிழில் முதன் முதலாக அறிமுகமாகிறார்.
இந்நிலையில் நடிகர் கார்த்திக் தன்னுடைய கல்லூரி கால புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார். பிஎஸ்பிபி பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த இவர் சென்னை கிரசென்ட் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்தார் என்பதும் பின்னர் மேல்படிப்புக்காக அவர் அமெரிக்காவிற்கு சென்று திரும்பிய பிறகு இயக்குநர் மணிரத்னம் இயக்கிய “ஆயுதஎழுத்து“ படத்தில் உதவியாளராக பணியாற்றினார் என்பதும் ரசிகர்களுக்கு தெரிந்ததுதான். தற்போது இயக்குநர் மணிரத்னம் இயக்கிவரும் “பொனனியின் செல்வன்“ படத்தின் முக்கிய வேடமான வந்தியதேவன் கதாபாத்திரத்தில் இவர் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout