சென்னையில் ரூ.10க்கு சாப்பாடு: சத்தமின்றி கார்த்தி ரசிகர்கள் நடத்தி வரும் உணவகம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னையில் சத்தமில்லாமல் கார்த்தியின் ரசிகர்கள் பத்து ரூபாய்க்கு சாப்பாடு அளித்துவரும் தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு மக்களுக்கு வேலை இன்றி வருமானமின்றி வாழ்வாதாரங்களை இழந்து உள்ளனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பொதுமக்களின் சேவை ஒன்றையே கணக்கில் கொண்டு கார்த்தி ரசிகர்கள் சென்னை வளசரவாக்கத்தில் கடந்த பல மாதங்களாக பத்து ரூபாய்க்கு முழு சாப்பாடு அளித்து வருகின்றனர்
சுகாதாரமான 50 ரூபாய் மதிப்புள்ள இந்த சாப்பாடு லாப நோக்கமின்றி மக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்துடன் கார்த்தியின் ஆதரவுடன் அவருடைய ரசிகர் மன்றத்தினர் 10 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர்
தினமும் 12.30 மணி முதல் 01.30 மணி வரை இயங்கும் இந்த உணவகத்தில் தினமும் 100 பேர்களுக்கு சாப்பாடு அளிக்கப்படுகிறது என்பதும் அந்த பகுதியில் உள்ள லாரி ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், தினக்கூலி தொழிலாளர்கள் இந்த உணவகத்தில் வந்து சாப்பிட்டு திருப்தியுடன் செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்தியின் ஆதரவுடன் அவரது ரசிகர்கள் சத்தமில்லாமல் பல மாதங்களாக செய்து வரும் இந்த சேவைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
50ரூபாய் மதிப்புள்ள சாப்பாட்டை 10ரூபாய்க்கு வழங்கும் கார்த்தி மக்கள் நல மன்றம்.
— jam movies (@jammovies_) February 3, 2022
கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி சுத்தமான முறையில் கடந்த 150 நாட்களுக்கும் மேலாக இந்த
தினசரி மதியம் 12.30 மணி முதல் 1.30 மணி வரை இந்த உணவகம் செயல்படுகிறது. @Karthi_Offl #karthimakkalnalamantram pic.twitter.com/PXnK30HyhF
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com