ரசிகர் மன்ற நிர்வாகி விபத்தில் பலி: நேரில் அஞ்சலி செலுத்திய கார்த்தி
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் கார்த்தியின் ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் நேற்று விபத்தில் ஒன்றில் பரிதாபமாக பலியானார். அவரது இல்லத்திற்கு சென்று நடிகர் கார்த்தி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
கார்த்தி மக்கள் நல மன்ற திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் ஜீவன்குமார். 27 வயதான இவர் நேற்று நண்பர்கள் தினேஷ், நாகராஜ் ஆகியோருடன் சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். கார்த்தி என்பவர் காரை ஓட்டினார். தாம்பரம் இரும்புலியூர் மேம்பாலத்தில் கார் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு கீழே பாய்ந்தது
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த காரில் பயணம் செய்த நான்கு பேரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் சிகிச்சையின் பலனின்றி ஜீவன்குமார், தினேஷ் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த நடிகர் கார்த்தி ஜீவன்குமாரின் இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
ஜீவன்குமாரின் இறுதிச்சடங்கில் கார்த்திக் ரசிகர் மன்றத்தினர் பலர் கலந்து கொண்டனர். ஜீவன்குமாருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com