நயன்தாரா படத்திற்கு பாராட்டுக்களை குவித்த நடிகர் கார்த்தி!
Send us your feedback to audioarticles@vaarta.com
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்த ’கூழாங்கல்’ என்ற திரைப்படத்திற்கு சமீபத்தில் சர்வதேச டைகர் விருது கிடைத்துள்ள நிலையில் இந்த படத்தின் குழுவினர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது தெரிந்ததே
அந்த வகையில் இந்த படத்திற்கு டைகர் விருது கிடைத்ததை கேள்விப்பட்டு தான் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாகவும், நம்முடைய திரையுலகைச் சேர்ந்த ஒருவர் சர்வதேச விருதினை தனது திறமையின் மூலம் பெறுவதை பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தை நாம் அனைவரும் திரையரங்குகளில் பார்க்க வேண்டும் என்று நம்புகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நயன்தாரா தயாரித்த திரைப்படத்திற்கு நடிகர் கார்த்தி பாராட்டு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் நயன்தாரா மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் இணைந்து கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ’காஷ்மோரா’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Hearty congratulations #Pebbles team on winning the Tiger Award. Feels so good to see a home grown talent receiving an international acclaim. Hope all of us get to watch this gem in the theatres. pic.twitter.com/WXGduL2r3E
— Actor Karthi (@Karthi_Offl) February 9, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments