6  ஆண்டுகளுக்கு முந்தைய கெட்டப்பிற்கு மாறிய கார்த்தி: ரசிகர்கள் ஆச்சரியம்!

  • IndiaGlitz, [Wednesday,July 27 2022]

நடிகர் கார்த்தி திடீரென 6 ஆண்டுகளுக்கு முந்தைய கெட்டப்புக்கு மாறிய புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான கார்த்தி தற்போது ’பொன்னியின் செல்வன்’ ‘விருமன்’ மற்றும் ’சர்தார்’ ஆகிய மூன்று படங்களில் நடித்து முடித்துள்ளார் என்பதும் இந்த படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திற்காக நீண்ட தலைமுடி மற்றும் தாடி வளர்த்திருந்த கார்த்தி, அதன் பின்னர்தான் ’சர்தார்’ படத்திற்காக கெட்டப் மாறினார். இந்த நிலையில் ’சர்தார்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்ததை அடுத்து கடந்த 2016 ஆம் ஆண்டு கெட்டப்பிற்கு கார்த்தி மாறியுள்ளார். அதாவது தாடி மீசை இல்லாமல் உள்ள கெட்டப்புக்கு மாறியுள்ளார். இதுகுறித்த புகைப்படத்தை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்த ’காற்று வெளியிடை’ என்ற திரைப்படத்தில்தான் கார்த்தி கடைசியாக தாடி மீசை இல்லாமல் தோற்றமளித்தார். இந்த நிலையில் 6ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதே கெட்டப்பில் அவர் மாறி உள்ளதை அடுத்து ரசிகர்கள் அவருடைய புதிய தோற்றத்தை பார்த்து ஆச்சரியம் அடைந்துள்ளனர்.