’யாரையும் இவ்வளவு அழகா பார்க்கலை’: சுல்தான் படத்தின் சூப்பர் அப்டேட்!

கார்த்திக் நடிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள சுல்தான் திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.

இந்த படம் ஏப்ரல் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது சிங்கிள் பாடல் ரிலீஸ் குறித்த சூப்பர் அப்டேட் ஒன்றை, இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளது.

’யாரையும் இவ்வளவு அழகா பார்க்கலை’ என்று தொடங்கும் இந்த இரண்டாவது சிங்கிள் பாடல் மார்ச் 5ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர்கள் விவேக்-மெர்வின் இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.