பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் கார்த்தி! என்ன காரணம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் கார்த்தி, பிரபல தெலுங்கு நடிகர் மற்றும் துணை முதலமைச்சர் பவன் கல்யாணிடம் தன்னுடைய சமூக வலைதளங்கள் மூலம் மன்னிப்பு கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘மெய்யழகன்’ படத்தின் தெலுங்கு புரமோஷன் நிகழ்ச்சியில் லட்டு குறித்து தொகுப்பாளர் கேள்வி கேட்டபோது, "லட்டு பற்றி இப்போது பேச வேண்டாம், இது சென்சிட்டிவ் டாபிக். இதனை பேச விரும்பவில்லை. லட்டு இப்போது வேண்டாம்.' என கூறினார். இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவியது.
கார்த்தியின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த ஆந்திர பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண், "சனாதனத்தை வைத்து ஜோக் செய்ய வேண்டாம். நான் நடிகர்கள் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். ஆனால் சனாதன தர்மம் என்று வரும்போது ஒரு விஷயத்தை கூறும் முன்பு 100 முறை யோசித்து சொல்ல வேண்டும்' என்று கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, கார்த்தி தனது சமூக வலைதள பக்கத்தில், பவன் கல்யாண் அவர்கள் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். எதிர்பாராத முறையில் ஏற்பட்ட தவறான புரிதலுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். உண்மையில், நான் வெங்கடேஸ்வராவின் தீவிர பக்தன் என்ற முறையில் மரபுகளை மதித்து நடக்கிறேன்," என்று கூறியுள்ளார்.
It’s wasn’t a random praise by Hon’ble Prime Minister @narendramodi ji to Power Star @PawanKalyan…
— Advocate Neelam Bhargava Ram (@nbramllb) September 24, 2024
Last night in a Movie Function there was fun on #TirupatiLaddu, Today morning Pawan ji warned him & immediately 👇🏻
Action… pic.twitter.com/d0DRz4Nrdn
Dear @PawanKalyan sir, with deep respects to you, I apologize for any unintended misunderstanding caused. As a humble devotee of Lord Venkateswara, I always hold our traditions dear. Best regards.
— Karthi (@Karthi_Offl) September 24, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments