விஜய் இடத்தை பிடித்த விஷால்-கார்த்தி

  • IndiaGlitz, [Tuesday,October 18 2016]

பாலிவுட்டில் இருந்து மீண்டும் கோலிவுட்டுக்கு நடிகராகவும், தயாரிப்பாளராகவும் திரும்பிய பிரபுதேவா, மீண்டும் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இயக்குனர் பிரபுதேவா என்றவுடன் அனைவருக்கும் ஞாபகம் வருவது இளையதளபதியின் 'போக்கிரி' தான். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் பிரபுதேவா மீண்டும் தமிழில் படம் இயக்கினால் அந்த படத்தில் விஜய்தான் ஹீரோ என கோலிவுட்டில் கூறப்பட்டது.
ஆனால் திடீர் திருப்பமாக பிரபுதேவா இயக்கவுள்ள புதிய படத்தில் விஷாலும் கார்த்தியும் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தை பிரபல கல்வித்தந்தை ஐசரி கணேஷ் தயாரிக்கவுள்ளதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளிவரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்திற்கு 'கருப்பு ராஜா வெள்ளை ராஜா' என்ற டைட்டில் வைத்திருப்பதாகவும், இந்த படத்தில் நடிக்கும் நாயகி உள்பட மற்ற நடிகர், நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

More News

மீண்டும் விக்னேஷ் சிவனுடன் இணைந்த நயன்தாரா

'நானும் ரெளடிதான்' படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்திசுரேஷ் நடிக்கவுள்ளதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

மீண்டும் விஜய்-அட்லி மேஜிக். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு

இளையதளபதி விஜய் நடித்துவரும் 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு முடிவடையவுள்ள நிலையில் இந்த படத்தை அடுத்து அவர் அட்லியின் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

கீர்த்திசுரேஷின் அம்மா எடுத்த அதிரடி முடிவு

'ரெமொ', 'பைரவா' நாயகி கீர்த்திசுரேஷ், முன்னாள் நடிகை மேனகாவின் மகள் என்பது அனைவரும் அறிந்ததுதான்.

'றெக்க' இயக்குனரின் அடுத்த படத்தில் விஜய்-ராகவா லாரன்ஸ்?

சமீபத்தில் வெளியான விஜய்சேதுபதியில் 'றெக்க' திரைப்படம் இரண்டாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது.