ஷாலினி அஜித்தின் தங்கையுடன் இணைந்த கார்த்தி.. இருவரும் சேர்ந்து என்ன செய்ய போறாங்க?
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித்தின் மனைவி ஷாலினி அஜீத்தின் தங்கை ஷாம்லி மற்றும் கார்த்தி இணைந்து சமூக சேவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
திரையுலக பிரபலங்கள் பலர் சமூக பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில் கழிவு மேலாண்மை என்ற சமூகப் பணிக்காக கார்த்தி மற்றும் ஷாம்லி இருவரும் இணைந்துள்ளனர்.
இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கார்த்தி தனக்கு தனது அம்மா பத்து வயதாக இருக்கும் போது கொடுத்த கிடாரை ஷாமிலியிடம் நன்கொடையாக கொடுக்க, அந்த கிடாரில் ஒரு அழகிய ஓவியம் வரைந்து ஷாம்லி அதை கலைப்பொருளாக மாற்றியுள்ளார்.
இதுகுறித்து கார்த்தி கூறிய போது, ‘சிறுவயதில் எனக்கு என் அண்ணனின் சைக்கிள் கிடைத்தது. நான் பயன்படுத்தியை அந்த சைக்கிளை எனது சகோதரிக்கு கொடுத்தேன். நாங்கள் எந்த பொருளையும் கழிவு என கருதி தூக்கி வீசியது கிடையாது.
அந்த வகையில் எனது அம்மா எனக்கு நான் பத்து வயதாக இருந்த போது கொடுத்த கிடாரை இப்போதும் வைத்திருக்கிறேன். கழிவு மேலாண்மை விழிப்புணர்வுக்காக அந்த கிடாரை நான் ஷாம்லியிடம் கொடுத்தேன். அதை அவர் ஒரு கலைப் பொருளாக மாற்றியுள்ளார். அதற்காக அவர் நிறைய செலவு நிறைய நேரம் செலவழித்து உள்ளார். அவருக்கு நான் நன்றி கூறிக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
கார்த்தி கொடுத்த கிடார் கழிவு மேலாண்மை விழிப்புணர்வு நன்கொடையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
A Great speech by @Karthi_Offl regarding waste management & being a part of a wonderful social initiative pic.twitter.com/iqcAPlqksh
— Johnson PRO (@johnsoncinepro) October 19, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments