கார்த்தி-ராஜூமுருகன் திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது? சூப்பர் தகவல்!

  • IndiaGlitz, [Thursday,September 22 2022]

கார்த்தி நடிப்பில் ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது என்பது குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.

கார்த்தி நடிப்பில் மணிரத்னம் இயக்கிய ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வரும் 30-ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இதனை அடுத்து கார்த்தி இரண்டு வேடங்களில் நடித்த ’சர்தார்’ என்ற திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது என்பது தெரிந்த்தே.

இந்த நிலையில் இயக்குனர் ராஜுமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகயிருக்கும் திரைப்படம் குறித்த தகவல் சமீபத்தில் வெளியானது. இந்த படம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அக்டோபர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்திற்கு ’ஜப்பான்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாகவும் ஜீவி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் விஜய் சேதுபதி இந்த படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டாலும் இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இந்த படத்தில் இதுவரை ஏற்றிராத வித்தியாசமான கேரக்டரில் கார்த்தி நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் ஒத்திகை பயிற்சிகளில் கார்த்தி ஈடுபட்டு வருவதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் கசிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.