கார்த்தி-ராஜூ முருகன் இணையும் 'ஜப்பான்': படப்பிடிப்பு எங்கே? எப்போது?

கார்த்தி முக்கிய வேடத்தில் நடித்த ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அவர் நடித்த மற்றொரு திரைப்படமான ’சர்தார்’ திரைப்படம் தீபாவளி அன்று வெளியாக உள்ளது. இந்த படத்திற்கான புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கார்த்தி நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் ராஜுமுருகன் இயக்க உள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை மறுநாள் அதாவது அக்டோபர் 5ஆம் தேதி தூத்துக்குடியில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ’ஜப்பான்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படம் அரசியல் கதையம்சம் கொண்ட படம் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே கார்த்தியுடன் ‘சுல்தான்’ படத்தில் நடித்திருந்தார். மேலும் ‘புஷ்பா’ படத்தில் நடித்த சுனில் இந்த படத்தின் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகயிருக்கும் இந்த படம் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.