'ஹேய்.. கர்மான்னா என்னன்னு தெரியுமாடா உனக்கு? கார்த்தியின் 'ஜப்பான்' பட வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
கார்த்தி நடித்த ’ஜப்பான்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடந்து வரும் நிலையில் சற்று முன் இந்த படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி விட்டதாக கூறி வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இதில் கார்த்தி முதலில் தன்னுடைய பகுதியின் டப்பிங் பணியை செய்யும் காட்சிகள் உள்ளன. குறிப்பாக ’ஹேய்.. கர்மான்னா என்னன்னு தெரியுமாடா உனக்கு? என்று கார்த்தி பேசும் வசனம் உள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
கார்த்திக் ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்கும் இந்த படத்தில் சுனில், விஜய் மில்டன், வாகை சந்திரசேகர் உட்பட பலர் நடித்துள்ளனர். ராஜு முருகன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில், ரவிவர்மன் ஒளிப்பதிவில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.
The journey to perfection begins! #JAPAN dubbing kickstarts 🤩
— DreamWarriorPictures (@DreamWarriorpic) September 13, 2023
🔗 https://t.co/qWwD5WsVZy
FIRING THIS DIWALI 🧨@Karthi_Offl @ItsAnuEmmanuel @vagaiyaar #Sunil @vijaymilton @sanalaman @gvprakash @dop_ravivarman @ActionAnlarasu @philoedit #Banglan @YugabhaarathiYb… pic.twitter.com/eeNGZkbFWw
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com