'சர்தார் 2' நாயகி மாற்றப்படுகிறாரா? ரூ.100 கோடி படம் கொடுத்தும் ராஷி கண்ணாவுக்கு என்ன ஆச்சு?
Send us your feedback to audioarticles@vaarta.com
கார்த்தி நடித்த ’சர்தார்’ படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்த ராஷி கண்ணா நாயகியாக நடிக்கவில்லை என்றும் வேறொரு நடிகையிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் கார்த்தி , ராஷி கண்ணா நடிப்பில், பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவான ’சர்தார்’ திரைப்படம் வெளியானது என்பதும், இந்த படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது என்பது தெரிந்தது.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக ’சர்தார் 2’ படத்தின் செய்திகள் கசிந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் திரைக்கதை எழுதும் பணியை இயக்குனர் பிஎஸ் மித்ரன் முடித்து விட்டதாகவும் தற்போது நட்சத்திரங்கள் தேர்வு செய்யும் பணிகளை செய்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ’சர்தார்’ படத்தின் முதல் பாகத்தில் நாயகியாக நடித்த ராஷி கண்ணா இரண்டாம் பாகத்திலும் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஏற்கனவே அவர் நடித்த ’அரண்மனை 4’ திரைப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதால் அவரது மார்க்கெட்டும் அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் ’சர்தார் 2 ’ படத்தின் நாயகியாக ராஷி கண்ணா நடிக்கவில்லை என்றும் அவருக்கு பதிலாக ஆஷிகா ரகுநாத் என்பவர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே ஆஷிகா ‘பட்டத்து அரசன்’ என்ற தமிழ் படத்திலும் சில தெலுங்கு மற்றும் கன்னட படத்தில் நடித்த நிலையில் மீண்டும் அவர் தமிழில் ரீஎன்ட்ரி ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் முதல் தொடங்க இருப்பதாகவும், கஜகஸ்தான், ஜார்ஜியா, அஜர்பைஜான் உள்ளிட்ட நாடுகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. மேலும் ’சர்தார்’ படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்த நிலையில் ‘சர்தார் 2’ படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments