மின்னல் வேகத்தில் முடிந்த படப்பிடிப்பு.. ரிலீசுக்கு தயாராகும் கார்த்தியின் அடுத்த படம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் கார்த்தி நடித்த அடுத்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு மின்னல் வேகத்தில் முடிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கார்த்தி நடித்த ’ஜப்பான்’ திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியான நிலையில் அவரது அடுத்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கியது. விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த ’96’ என்ற படத்தை இயக்கிய பிரேம்குமார் இயக்கத்தில் உருவாகி வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு மின்னல் வேகத்தில் நடந்து வந்த நிலையில் தற்போது கார்த்தி சம்பந்தப்பட்ட படப்பிடிப்புகள் முடிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி ஒரு சில மாதங்களே ஆகியுள்ள நிலையில் அதற்குள் படப்பிடிப்பு நிறைவடையும் கட்டத்தை நெருங்கி விட்டதாகவும் சரியான திட்டமிடல் காரணமாக இந்த படம் எதிர்பார்த்த நாட்களுக்கு முன்கூட்டியே முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்திற்கு ’மெய்யழகன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில் டைட்டில் உடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை ஸ்ரீதிவ்யா இந்த படத்தில் கார்த்தியின் தங்கை கேரக்டரில் நடித்திருப்பதாகவும் அரவிந்த்சாமி இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருப்பதாகவும் இந்த படம் குடும்ப செண்டிமெண்ட் கலந்த கதையம்சம் கொண்டது என்றும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout