close
Choose your channels

கார்த்தி - நலன்குமாரசாமி படத்தின் நாயகி இவரா?

Wednesday, February 22, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் கார்த்தி தற்போது ’ஜப்பான்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் ராஜூமுருகன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’ஜப்பான்’ படத்தை அடுத்து நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகயிருக்கும் படத்தில் கார்த்தி நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கார்த்தி - நலன் குமாரசாமி முதல் முறையாக இணையும் இந்த படத்தின் நாயகி ஆக பிரபல ஹிந்தி சீரியல் நடிகை காயத்ரி பரத்வாஜ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர் சமீபத்தில் ரவிதேஜா நடிப்பில் உருவாகி வரும் தெலுங்கு படம் ஒன்றில் நாயகியாக நடித்து வருகிறார் என்பதும் இந்த படம் ரிலீஸ் ஆகும் முன்பே அவருக்கு தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் இறுதி வாரத்தில் தொடங்கும் என்றும் மார்ச் முதல் வாரத்தில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment