கார்த்தி-லோகேஷ் கனகராஜின் 'கைதி 2' படம் குறித்த சூப்பர் தகவல்

கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான ’கைதி’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் அந்த படத்தின் இறுதியில் அடுத்த பாகம் உருவாகும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது கமல்ஹாசன் தயாரித்து நடித்து வரும் ‘விக்ரம்’ என்ற படத்தை இயக்கி வரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ‘கைதி 2’ படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணியை முடித்து விட்டதாகவும், ‘விக்ரம்’ படத்தை முடித்தவுடன் அவர் ‘கைதி 2’ படத்தின் படப்பிடிப்பை தொடங்குவார் என்று கூறப்படுகிறது.

’கைதி’ படத்தில் நடித்த கார்த்தி, நரேன், உள்ளிட்டவர்கள் ’கைதி 2’ படத்திலும் நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கவுள்ளது என்பதும், இந்த படம் அடுத்த ஆண்டு மத்தியில் தொடங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ’கைதி 2’ படத்தை முடித்தவுடன் தளபதி விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்று கூறப்படுகிறது.

More News

Indiaglitz வழங்கும் நகைச்சுவை பட்டிமன்றம்: நடுவராக மதுரை முத்து!

Indiaglitz பெருமையுடன் வழங்கும் நகைச்சுவை பட்டிமன்றம் சென்னையில் வரும் 31ம் தேதி நடைபெற உள்ளது.

மறைந்த தாயாருக்காக நினைவில்லம் கட்டும் ஏ.ஆர்.ரஹ்மான்: வைரல் வீடியோ!

தமிழ் திரை உலகில் மட்டுமின்றி இந்திய திரை உலகில் முன்னணி இசையமைப்பாளராக இருந்து வரும் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் தனது தாயாருக்காக நினைவு இல்லம் கட்டி வருவதாக வெளியிட்டுள்ள வீடியோ

மீண்டும் அபிநய் பிரச்சனையை இழுக்கும் பாவனி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நடைபெற்று வரும் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் இறுதிகட்டத்தில் சிபி, அமீர் மற்றும் சஞ்சீவ் ஆகிய மூவர்

பிக்பாஸ் எவிக்சன்: ஆபத்தான நிலையில் இருக்கும் மூன்று போட்டியாளர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 88 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு ஞாயிறு அன்றும் நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் குறைந்த வாக்குகள் பெற்றவர்கள் அடிப்படையில் ஒரு போட்டியாளர்

'இந்தியன் 2' படத்தில் விவேக் கேரக்டரில் நடிப்பது யார்?

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பில் கடந்த சில ஆண்டுகளாக சில பிரச்சனைகள் இருந்தாலும் விரைவில்