நடிகர் சங்க பெயர் மாற்றம் குறித்து கார்த்தி-கருணாஸ் பதில்
Send us your feedback to audioarticles@vaarta.com
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் வாக்களித்துவிட்டு வெளியே வந்த ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்த நடிகர் சங்க பெயர் மாற்ற கருத்து குறித்து தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கருத்து கூறியுள்ள பாண்டவர் அணியின் பொருளாளர் பதவிக்கான வேட்பாளர் கார்த்தி கூறும்போது, 'தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை மாற்றும் ரஜினியின் கருத்து ஏற்புடையதே. இருப்பினும் வெற்றிக்கு பின்னர் அனைத்து உறுப்பினர்களிடமும் கலந்து ஆலோசித்து இதுகுறித்து முடிவு செய்யப்படும்' என்று கூறினார்.
மேலும் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாதவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று ரஜினி கூறியது குறித்து கூறிய கார்த்தி, 'நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை குறிப்பிட்ட கால அளவிற்குள் கண்டிப்பாக நிறைவேற்றிவிடுவோம். வாக்குறுதி கொடுத்தவர்கள் அதை நிறைவேற்ற வேண்டும் என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்துதான்' என்று கூறினார்.
இதுகுறித்து பாண்டவர் அணியின் கருணாஸ் கருத்து கூறும்போது, 'பெயர் மாற்ற விஷயத்தில் அனைத்து உறுப்பினர்களின் ஒருமித்த கருத்து எதுவோ அதுவே எனது கருத்தும்' என்றும் கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments