அத்தான்.. பீர் அடிப்பிங்களா? கார்த்தி - அரவிந்த் சாமியின் 'மெய்யழகன்' டிரைலர்..!

  • IndiaGlitz, [Saturday,September 07 2024]

கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி முக்கிய வேடத்தில் நடித்த ‘மெய்யழகன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் 27ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகி இணையத்தின் வைரல் ஆகி வருகிறது.

ஒன்றரை நிமிடம் இருக்கும் இந்த டீசர் வீடியோவில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமியின் ஜாலியான உரையாடல் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக ’அத்தான்.. பீர் அடிப்பீர்களா என கார்த்தி ஜாலியாக கேட்பதும், அதற்கு அரவிந்த்சாமி வேண்டாம் என்றும் சொல்வதுமான காட்சியும் உள்ளது.

கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி உறவினர்களாக நடித்திருக்கிறார்கள் என்பதும் படம் முழுவதும் ஒரு ஜாலியான குடும்ப கதையாக இருக்கும் என்றும் இந்த டீசரில் இருந்து தெரிய வருகிறது.

கார்த்தி, அரவிந்த்சாமி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடித்த ’96’ படத்தை இயக்கிய பிரேம் குமார் இந்த படத்தை இயக்கி உள்ளார் என்பதும் சூர்யா ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சீனு ராமசாமியின் 'கோழிப்பண்ணை செல்லத்துரை' படத்தின் பாடல்.. தமன்னா என்ன செய்தார் தெரியுமா?

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான 'கோழிப்பண்ணை செல்லத்துரை' என்ற திரைப்படம் வரும் 20ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில்

மார்பக புற்றுநோயோடு மற்றொரு நோய்.. பரிதாபமான நிலையில் பிரபல நடிகை..!

பிரபல நடிகை ஒருவர் மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கீமோதெரபி காரணமாக பக்க விளைவுகள் ஏற்பட்டு மற்றொரு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக

அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இயக்குனர் ஷங்கர்.. மாஸ் போஸ்டர் ரிலீஸ்..!

ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'இந்தியன் 2' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில், அவரது இயக்கத்தில் உருவாகி வரும் இன்னொரு திரைப்படமான

தமிழை தாண்டி வேறு மொழி படத்தில் ஹீரோயின் ஆன அதிதி ஷங்கர்.. ஹீரோ யார் தெரியுமா?

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் தமிழில் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது வேறு மொழியிலும் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

நீலக்கடல் பின்னணியில் நீல நிற தேவதையாக ரம்யா பாண்டியன்.. லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

நீலக்கடலின் பின்னணியில் நீல நிற காஸ்ட்யூம் அணிந்து தேவதை போல் இருக்கும் ரம்யா பாண்டியன் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.