சித்ஸ்ரீராம் மயக்கும் குரலில் 'கஞ்சா பூ கண்ணாலே': வைரலாகும் 'விருமன்' பாடல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், கார்த்தி, அதிதி ஷங்கர் நடிப்பில், முத்தையா இயக்கத்தில் உருவான ’விருமன்’ திரைப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சற்று முன்னர் இந்த படத்தில் இடம்பெற்ற ’கஞ்சா பூ கண்ணாலே’ என்ற பாடல் வெளியாகி இணையதளங்களில் வைரலாக வருகிறது.
யுவன் சங்கர் ராஜா கம்போஸ் செய்த இந்த பாடலை யுவன்சங்கர் ராஜா மற்றும் சித்ஸ்ரீராம் இணைந்து பாடியுள்ளனர். குறிப்பாக சித்ஸ்ரீராமின் மயக்கும் குரலுக்கு ரசிகர்கள் மயங்கியே விட்டனர் என்று கூறலாம். இந்த பாடலை கருமாத்தூர் மணிமாறன் என்பவர் எழுதியுள்ளார். இந்த பாடலின் இனிமையான சில வரிகள் இதோ:
கஞ்சா பூ கண்ணாலே செப்பு சிலை உன்னாலே
இடுப்பு வேட்டி அவுறுதடி நீ சிரிச்சா தன்னாலே
கஞ்சா பூ கண்ணாலே செப்பு சிலை உன்னாலே
இடுப்பு வேட்டி அவுறுதடி நீ சிரிச்சா தன்னாலே
உன் தட்டங்கை பல்லாலே நீ சொன்ன ஒத்த சொல்லாலே
சூரியனையும் உடைப்பேண்டி கவட்டை எடுத்து கல்லாலே
கருப்பட்டி கரைச்சு செஞ்சு வச்ச சிலையா
பச்சரிசி போட்ட பொங்கப்பானை உரையா
ஈரக்குலையை சுரண்டி என்ன கொல்லுராயே கொலையா
கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ்ராஜ், சூரி, ராஜ்கிரண், மைனா நந்தினி, மனோஜ் பாரதிராஜா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்திற்கு செல்வகுமார் ஒளிப்பதிவும், வெங்கட்ராஜா படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com