'காற்று வெளியிடை'- ட்ரைலர் விமர்சனம்

  • IndiaGlitz, [Thursday,March 09 2017]

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த காற்று வெளியிடை' படத்தின் ட்ரைலர் வெளியாகிவிட்டது. இயக்குனர் மணி ரத்னம், நடிகர் கார்த்தி ஆகியோர் முதல் முறையாக இணைந்திருப்பதால் இந்தப் படத்தின் மீது ஏற்கனவே பலத்த எதிர்பார்ப்பு இருக்கிறது. அந்த எதிர்பார்ப்பை, ட்ரைலர் அதிகரித்திருக்கிறதா குறைத்திருக்கிறதா என்பதை பார்க்கலாம்.

இந்தப் படம் காஷ்மீரில் நடக்கும் காதல் கதை என்பதும், கார்த்தி ஒரு விமான பைலட்டாகவும் நாயகி அதிதி ராவ் ஹைதரி மருத்துவராகவும் நடித்திருக்கிறார் என்ற தகவல்கள் நாம் அனைவரும் அறிந்தவையே. ட்ரைலர் அந்தத் தகவல்களை மணி ரத்னம் ஸ்டைலில் உறுதி படுத்துகிறது.
மீசை தாடியில்லாத கார்த்தி மேலும் இளமையாகத் தெரிகிறார். காதல் வசனங்களையும் எமோஷனல் வசனங்களையும் பேசும் விதம் அவரிடமிருந்து மற்றுமொரு சிறந்த நடிப்பை எதிர்பார்க்க வைக்கின்றது. புதுமுக அதிதி ராவ் ஹைதரி அழகாக இருக்கிறார். மணி ரத்னம் படத்தின் நாயகிகள் அழகாக இருப்பது புதிதல்ல.
ரவிவர்மன் ஒளிப்பதிவில் காஷ்மீரின் பனிச் சரிவுகளையும் இள வெய்யில் பொழுதுகளையும் பார்ப்பது மிக இனிமையாக உள்ளது. ஏ.ஆர். ரகுமானின் துள்ளலான பின்னணி இசையும் இது ஒரு இளமை ததும்பும் காதல் படம் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறது. கூடவே மணியின் ஷார்ப்பான காதல் வசனங்களும் படம் அலைபாயுதே', ஓ காதல் கண்மணி' போன்ற மறக்க முடியாத காதல் படங்களைப் போல் மற்றுமொரு காதல் படத்தை எதிர்பார்க்க வைக்கின்றன.
மொத்தத்தில் காற்று வெளியிடை' படத்தின் ட்ரைலர் மணி ரத்னம் பாணியில் இது ஒரு ரசனையான காதல் படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது என்று தயக்கமின்றி சொல்லலாம்.

More News

ரஜினிகாந்த் ஒருவர் மட்டுமே சூப்பர் ஸ்டார். ராகவா லாரன்ஸ் விளக்கம்

ராகவா லாரன்ஸ் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள 'மொட்டசிவா கெட்ட சிவா' படத்தின் டைட்டிலில் அவர் பெயருக்கு முன்னாள் 'மக்கள் சூப்பர் ஸ்டார்' என்ற அடைமொழி உள்ளது.

விஷாலிடம் விஷம் இருப்பது உண்மைதான். மிஷ்கின் அதிரடி பேச்சு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலில் போட்டியிடும் ஐந்து அணியினர்களும் தற்போது தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

ஜெயேந்திரருடன் டிடிவி தினகரன் திடீர் சந்திப்பு! பாஜகவுக்கு தூது?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் காஞ்சி சங்கராச்சாரியர்களான ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆகியோர்களுக்கும் இடையே சிலகாலம் நல்லுறவு இருந்தாலும் பின்னர் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது.

ஆர்.கே.நகர் தேர்தல் தேதி அறிவிப்பு. தீபா போட்டியிடுவாரா?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியான சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி அவருடைய மரணம் காரணமாக கடந்த சில மாதங்களாக காலியாகவுள்ளது.

வரலட்சுமியின் 'சேவ் சக்தி'க்கு ஆன்லைனில் ஆதரவு கொடுப்பது எப்படி?

பிரபல நடிகை பாவனா பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவம் நடிகைகள் இடையே பல விழிப்புணர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ளது.