பொன்னியின் செல்வன்: வந்தியத்தேவன் கேரக்டரில் பிரபல நடிகர்

  • IndiaGlitz, [Saturday,March 16 2019]

மணிரத்னம் அவர்களின் கனவுப்படமான 'பொன்னியின் செல்வன்' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருவதாகவும் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சிம்பு ஆகியோர்கள் நடிக்கவுள்ளதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் நாவலின் கதாநாயகனான வந்தியத்தேவன்' கேரக்டரில் கார்த்தி நடிக்கவுள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்த கேரக்டர் வீரம், காதல், காமெடி மற்றும் தந்திரம் ஆகியவை கலந்து அமரர் கல்கி உருவாக்கியிருப்பார். இந்த கேரக்டரை எந்த அளவுக்கு கார்த்தியை பொருந்த வைக்க மணிரத்னம் முயற்சிக்கின்றார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

அதேபோல் டைட்டில் கேரக்டரான பொன்னியின் செல்வன் என்ற ராஜராஜ சோழன் கேரக்டரில் நடிப்பது யார்? என்பது குறித்த தகவலும் விரைவில் வெளிவரவுள்ளது. இந்த படத்தை பிரமாண்டமாக லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. மணிரத்னம் இயக்கிய முந்தைய படமான 'செக்க சிவந்த வானம்' படத்தையும் இதே லைகா நிறுவனம் தான் தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது

More News

மக்களவை தேர்தல் எதிரொலி: பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை அதிகரிப்பு

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் ஆகியவை வரும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவுள்ளதால் அதற்கு முன்னரே அதாவது ஏப்ரல் 14ஆம் தேதிக்கு முன்னரே

ஆன்லைன் லஞ்ச் வேண்டாம்: பெற்றோர்களுக்கு சென்னை பள்ளி நிர்வாகம் வேண்டுகோள்

பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு மதிய உணவாக ஆன்லைனில் ஆர்டர் செய்ய வேண்டாம் என் சென்னை பள்ளியின் நிர்வாகம், பெற்றோர்களை கேட்டுக்கொண்டுள்ளது

இதுதான் கடவுள் கொடுத்த வரம்: செளந்தர்யா ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரண்டாவது மகள் செளந்தர்யாவுக்கு நடிகர் மற்றும் தொழிலதிபர் விசாகனுக்கும் கடந்த மாதம் 11ஆம் தேதி திருமணம் நடந்தது.

துப்பாக்கி லைசன்ஸ் கேட்டு பள்ளி, கல்லூரி மாணவிகள் மனு 

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்திற்கு பின்னர் பாலியல் கொடூரர்களிடம் இளம்பெண்கள் சிக்காமல் இருக்க கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் தேவைப்பட்டால்

பொள்ளாச்சி விவகாரம்: ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு சிபிசிஐடி கடிதம்

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் கடந்த சில ஆண்டுகளாக நடந்து கொண்டிருந்தாலும், சமூக வலைத்தளங்களில் வீடியோ, ஆடியோ வெளியான பின்னரே தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது