கார்த்தி - நலன் குமாரசாமி படத்தின் சூப்பர் வீடியோவை வெளியிட்ட படக்குழு.. முக்கிய அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Friday,March 08 2024]

கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் இந்த படத்தின் பூஜை வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கார்த்தி நடிப்பில், நலன் குமாரசாமி இயக்கத்தில், ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’கார்த்தி 26’. ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் 27வது படமான இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்ட நிலையில் அடுத்த கட்டமாக புரமோஷன் பணிகள் தொடங்க இருப்பதாகவும் முதல் கட்டமாக இந்த படத்தின் டைட்டில் உடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டது.

இந்த படத்திற்கு ’வா வாத்தியாரே’ என்று டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்ட நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் பூஜை வீடியோ வெளியாகி உள்ளது. இந்த படத்தில் எம்ஜிஆர் ரசிகராக இந்த கார்த்தி நடித்ததாக கூறப்படும் நிலையில், இந்த வீடியோவின் ஆரம்பத்தில் மாலை போட்ட எம்ஜிஆர் படம் காண்பிக்கப்பட்டதிலிருந்து அது உறுதி செய்யப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் பூஜையில் கார்த்தி, சூர்யா, சிவகுமார், ஞானவேல் ராஜா, கெளதம் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்ட காட்சிகள் உள்ளன. இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என்று இந்த வீடியோவின் இறுதியில் அறிவிக்கப்பட்டுள்ளது.