கார்த்தியின் அடுத்த படத்தின் டைட்டில்?

  • IndiaGlitz, [Monday,May 28 2018]

கார்த்தி, ரகுல் ப்ரித்திசிங் நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனையடுத்து கார்த்தி தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கடைக்குட்டி சிங்கம்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் சாயிஷா மற்றும் பிரியா பவானிசங்கர் நாயகிகளாக நடித்துள்ளனர். இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

இந்த நிலையில் கார்த்தி தற்போது ரஜத் ரவிசங்கர் என்ற அறிமுக இயக்குனர் இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மீண்டும் ரகுல் ப்ரித்திசிங் கார்த்தியுடன் ஜோடி சேர்ந்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இந்தியாவின் பல பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு மூன்று டைட்டில்களை படக்குழுவினர் தேர்வு செய்து வைத்துள்ளதாகவும், அதில் ஒன்று 'தேவ்' என்றும் கூறப்படுகிறது. 'தேவ்' என்பது இந்த படத்தின் நாயகன் பெயரா? அல்லது வேறு ஏதாவது அர்த்தமா? என்பது போக போகத்தான் தெரியவரும்

More News

'காலா' டிரைலர் ரிலீஸ் தேதி மற்றும் நேரம் அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்பட வரும் ஜூன் 7ஆம் தேதி ரிலீஸ் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் தயாராகவுள்ளது.

தமிழகத்திற்கும் பரவிவிட்டதா நிபா வைரஸ்? மருத்துவர்கள் விளக்கம்

கேரளாவில் கடந்த சில நாட்களாக பரவி வரும் நிபா வைரஸ் தாக்குதலால் பலர் உயிரிழந்து வருகின்றனர். வெளவால்கள் மூலம் பரவி வரும் இந்த கொடுமையான நோய், கேரளா மட்டுமின்றி தமிழகத்திலும் பரவிவிட்டதாக அச்சம் தரும்

மீண்டும் ஆர்.கே.நகர் பரபரப்பாகுவது எப்போது?

அரசியல் நையாண்டி படங்கள்  எப்போதுமே அந்தந்த கால கட்டங்களில் பார்வையாளர்களுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்கிறது. சமகாலத்திய நிகழ்வுகளை படத்தில்  பிரதிபலிக்க இந்த வகை படங்கள் உதவுகின்றன.

தோனி இந்தியாவின் பிரதமர் வேட்பாளரா? பிரபல இயக்குனரின் டுவீட்

தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நேற்று பலம் வாய்ந்த ஐதராபாத் அணியை பிரித்து மேய்ந்து மிக எளிதில் சாம்பியன் பட்டம் பெற்றது.

தமிழகம் முழுவதும் வலம் வரும் 'கோலி சோடாவின்' ஜிஎஸ்டி வண்டி

ஒரு திரைப்படத்தின் உருவாக்கம் எந்த அளவுக்கு முக்கியமோ அதேபோல் அந்த படத்தின் புராமோஷனும் ரொம்ப முக்கியம். நல்ல படங்கள் கூட சிலசமயம் சரியான புரமோஷன் இல்லாததால் தோல்வி அடைந்துள்ளன