இன்று முதல் கார்த்தியின் புதிய அத்தியாயம்

  • IndiaGlitz, [Saturday,April 28 2018]

கோலிவுட் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவர் கார்த்தி. இவருடைய நடிப்பில் பாண்டிராஜ் இயக்கிய 'கடைக்குட்டி சிங்கம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது.

இந்த நிலையில் கார்த்தியின் அடுத்த  படமான 'கார்த்தி 17' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தில் கார்த்தியின் காட்சிகள் இன்றுமுதல் படமாக்கப்படவுள்ளது.

இன்று முதல் ஜூன் 4 வரை சென்னை மற்றும் ஐதராபாத்தில் 'கார்த்தி 17' படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும் இந்த படத்தில் கார்த்தி வித்தியாசமான லுக்கில் ஸ்டைலிஷாக இருப்பார் என்றும் இயக்குனர் ரஜத் தெரிவித்துள்ளார். 

இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் நடித்த ரகுல் ப்ரித்திசிங் நடிக்கவுள்ளார். மேலும் ரிலையன்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்கும் இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் S. லக்ஷ்மன் குமார் தயாரிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பு பணியும் செய்கின்றனர்.  

More News

அடுத்தடுத்த வாரங்களில் வெளிவரும் தமிழ்த்திரைப்படங்களின் பட்டியல்

வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் புதிய திரைப்படங்கள் வெளியாக தொடங்கிவிட்டன. கடந்த வாரம் 'மெர்க்குரி' படமும் இந்த வாரம் தியா, பக்கா மற்றும் பாடம் ஆகிய படங்களும் வெளியாகியுள்ளன

சென்னையில் எனக்கும் பாலியல் தொல்லை: நடிகை ரெஜினா

நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் குறித்து கடந்த சில நாட்களாகவே கூறி கொண்டு வரும் நிலையில் ரெஜினா தனக்கு ஏற்பட்ட ஒரு கசப்பான நிகழ்வு குறித்து நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளார்.

ஒரே நேரத்தில் மூன்று சூப்பர் ஸ்டார்களுடன் நடிக்கும் விஜய்சேதுபதி

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்

வெற்றி பெற்ற இரவில் தோனி, ரெய்னா மகள்கள் செய்தது என்ன தெரியுமா?

நேற்று முன் தினம் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணிகள் மோதிய போட்டியில் தோனி மற்றும் ராயுடு அதிரடியில் சென்னை அணி, 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றி பெற்றது.

திருமணம் எப்போது? ஸ்ருதிஹாசன் பதில்

நடிகை ஸ்ருதிஹாசன் லண்டனை சேர்ந்த நடிகர் மைக்லேல் கார்சல் என்பவரை காதலித்து வருவதாகவும், அவரையே ஸ்ருதிஹாசன் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் கூறப்பட்டது.