கல்வி முறையே தவறாக இருக்கிறது? விரக்தியில் மாணவர் எடுத்து விபரீத முடிவு!
- IndiaGlitz, [Friday,October 29 2021]
கர்நாடக மாநிலத்தில் பொறியியல் மாணவர் ஒருவர், கல்வி முறையே தவறாக இருக்கிறது, அதில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என வீடியோ பதிவுசெய்து வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் இயங்கிவரும் ராஜீவ் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் பொறியியல் மாணவராக இருப்பவர் ஹேமந்த் கவுடா. விடுதியில் தங்கிப் படித்துவந்த இவர் கடந்த திங்கள்கிழமை மனவிரக்தியில் 21 நிமிடத்திற்கு ஒரு வீடியோவை பதிவுசெய்து வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
மாணவர் ஹேமந்த் பதிவுசெய்து வைத்துள்ள அந்த வீடியோவில் தற்போதைய கல்வி முறையில் இருக்கும் பிரச்சினைகள் குறித்து பேசியுள்ளார். மேலும் ஒருவரின் தொழில் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவது எப்படி சரியாகும் என கேள்வி எழுப்பிய அவர் கல்விமுறையில் கண்டிப்பாக மாற்றம் வேண்டும். மேலும் தனது இறுதிச்சடங்கில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் கல்வி அமைச்சரும் பங்கேற்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருப்பது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.