கர்நாடகா சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு: காவிரி மேலாண்மை வாரியத்திற்கு சிக்கலா?
Send us your feedback to audioarticles@vaarta.com
கர்நாடகா மாநிலத்தின் சட்டசபையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைதால், இன்று அம்மாநிலத்தின் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இதன்படி சற்றுமுன்னர் தேர்தல் ஆணையம் கர்நாடக மாநிலத்தின் தேர்தல் தேதியை அறிவித்துள்ளது.
கர்நாடக மாநில சட்டசபைக்கு ஒரே கட்டமாக மே 12ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கை எண்ணிக்கை நடைபெற்று அன்று இரவே தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் சுமார் 4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளதாகவும், 56,696 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தலைமை தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் அறிவித்துள்ளார்
இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிப்பால் தேர்தல் நடத்தை முறை கர்நாடக மாநிலத்தில் அமலுக்கு வந்துவிட்டது. இதன் காரணமாக காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் சிக்கல் ஏற்படுமா? என்ற கருத்து தமிழக விவசாயிகள் இடையே ஏற்பட்டிருந்தது ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தடையில்லை என்றும் நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றலாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதால் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
ஆறு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் விடுத்த காலக்கெடு முடிய இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments