கர்நாடகா சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு: காவிரி மேலாண்மை வாரியத்திற்கு சிக்கலா?

  • IndiaGlitz, [Tuesday,March 27 2018]

கர்நாடகா மாநிலத்தின் சட்டசபையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைதால், இன்று அம்மாநிலத்தின் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இதன்படி சற்றுமுன்னர் தேர்தல் ஆணையம் கர்நாடக மாநிலத்தின் தேர்தல் தேதியை அறிவித்துள்ளது.

கர்நாடக மாநில சட்டசபைக்கு ஒரே கட்டமாக மே 12ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கை எண்ணிக்கை நடைபெற்று அன்று இரவே தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் சுமார்  4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளதாகவும், 56,696 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தலைமை தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் அறிவித்துள்ளார்

இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிப்பால் தேர்தல் நடத்தை முறை கர்நாடக மாநிலத்தில் அமலுக்கு வந்துவிட்டது. இதன் காரணமாக காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் சிக்கல் ஏற்படுமா? என்ற கருத்து தமிழக விவசாயிகள் இடையே ஏற்பட்டிருந்தது ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தடையில்லை என்றும் நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றலாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதால் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

ஆறு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் விடுத்த காலக்கெடு முடிய இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கோடை விடுமுறையை குறிவைக்கும் விஜய்சேதுபதியின் படம்

அஜித், விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்கள் வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே நடித்து வரும் நிலையில் பிரபல நடிகர் விஜய்சேதுபதி ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது ஐந்து படங்களில் நடித்து வருகிறார்

அடுத்த தலைமுறை இளைஞர்களின் டிரெண்டுக்கு மாறிய சுனைனா

கோலிவுட் திரையுலகில் தற்போது தயாரிப்பாளர்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருவதால் தயாரிப்பாளர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

தாடி பாலாஜி குடும்பத்தை இணைக்க சிம்பு எடுத்த முயற்சி

தாடி பாலாஜியும், அவருடைய மனைவி நித்யாவும் சமீபத்தில் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நித்யா தனது கணவர் பாலாஜி மீது போலீஸ் புகார் கொடுக்க வழக்கு விசாரணையில் உள்ளது.

ஐபிஎல் கேப்டன்கள் அனைவரும் இந்தியர்களே! முதல்முறை நடைபெறும் அதிசயம்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கடந்த 10ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. 11வது ஐபிஎல் போட்டிகள் வரும் ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ள நிலையில் இப்போதே ஐபிஎல் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகிவிட்டது.

கார்த்திக் சுப்புராஜூக்கு ரஜினி கொடுத்த கால்ஷீட் நாட்கள்

ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தை இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார் என்பதும் இந்த படத்தை கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளது என்பதும் தெரிந்ததே