நிவாரண பொருட்களை தூக்கி எறியும் அமைச்சர்: நெட்டிசன்கள் ஆத்திரம்
- IndiaGlitz, [Monday,August 20 2018]
கேரள மாநிலத்தை போலவே கர்நாடக மாநிலத்தின் பெரும்பகுதி தென்மேற்கு பருவமழையால் பெரும் பாதிப்பில் உள்ளநிலையில் அம்மாநில அரசும் மீட்புப்பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. மேலும் அமைச்சர்கள் நேரில் பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று தங்கள் கைகளாலே நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சரும் கர்நாடக மாநிலத்தின் முதல்வர் குமாரசாமியின் சகோதரருமான ரேவண்ணா என்பவர் நிவாரண பொருட்களை மக்களிடம் அலட்சியமாக தூக்கி எறியும் காணொலி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை பார்த்த பல நெட்டிசன்கள் ஆத்திரம் அடைந்து அமைச்சரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஒருபக்கம் கேரளாவில் படகில் ஏற படிக்கட்டாக மாறி தியாக மனப்பான்மையுடன் சேவை செய்து வரும் நிலையில் விலங்குகளுக்கு தூக்கி போடுவது போல் நிவாரண பொருட்களை அமைச்சர் தூக்கி போட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அமைச்சர் தூக்கி போட்ட பொருட்களை பலர் நிராகரித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ನೆರೆ ಸಂತ್ರಸ್ತರಿಗೆ ಧಿಮಾಕಿನಿಂದ ಬಿಸ್ಕೆಟ್ ಪ್ಯಾಕೆಟ್ ಗಳನ್ನು ಎಸೆಯುತ್ತಿರುವ ಲೋಕೋಪಯೋಗಿ ಸಚಿವ!!
— ಜಗದೀಶ್ ರಾಜ್ - Jagadish Raj (@Jagadis52469223) August 20, 2018
ಇಂಥಹವರೆಲ್ಲಾ ನಮ್ಮ ಸಚಿವರು..
ದೌವಲತ್ತು ಧಿಮಾಕು ದುರಹಂಕಾರ ನೋಡಿ ಎಷ್ಟಿದೆ ಅಂತಾ..#kodagufloods #Kodaguflood #KarnatakaFloods #KarnatakaRains #Karnataka#revanna pic.twitter.com/GLDBxJE9Ey