எதிர்பாராமல் நேர்ந்த திடீர் விபத்து: லண்டன் மருத்துவமனையில் பாம்பே ஜெயஸ்ரீ அனுமதி..!

  • IndiaGlitz, [Friday,March 24 2023]

எதிர்பாராமல் ஏற்பட்ட திடீர் விபத்து காரணமாக பிரபல கர்நாடக இசைக்கலைஞர் பாம்பே ஜெயஸ்ரீ லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

பிரபல திரைப்பட பின்னணி பாடகி மற்றும் கர்நாடக இசை கலைஞர் பாம்பே ஜெயஸ்ரீ தமிழ் உள்பட பலமொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். குறிப்பாக ’மின்னலே’ என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற வசீகரா என்ற பாடல் உள்பட பல பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன.

இளையராஜா, ஏஆர் ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ் உள்பட பல இசையமைப்பாளர்களிடம் அவர் பணி புரிந்துள்ளார் என்பதும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பல இசை நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் லண்டனில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றிற்காக பாம்பே ஜெயஸ்ரீ லண்டனுக்கு சென்றிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். அப்போது அவருடைய தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் சுயநினைவு இழந்து உள்ளதாகவும் அவருக்கு லண்டன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

More News

மாமனாருக்கு இறுதியஞ்சலி செலுத்திய ஷாலினி அஜித்.. வீடியோ

அஜித்தின் தந்தை சுப்ரமணியம் என்பவர் இன்று காலை காலமான நிலையில் மாமனாருக்கு ஷாலினி அஜீத் இறுதியஞ்சலி செலுத்திய காட்சியின் வீடியோ இணையதளங்களில் பதிவாகியுள்ளது. 

அஜித் வீட்டுக்கு சென்று விஜய் ஆறுதல்..!

அஜித்தின் தந்தை இன்று காலை காலமான நிலையில் அஜித்தின் வீட்டிற்கே நேரடியாக சென்று விஜய் அவருக்கு ஆறுதல் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

தந்தையின் இறுதிச்சடங்கு: அஜித்தின் முக்கிய அறிவிப்பு..!

அஜித்தின் தந்தை இன்று காலை காலமான நிலையில் அஜித்தின் தரப்பிலிருந்து முக்கிய அறிவிப்பு ஒன்று சற்று முன் வெளியாகி உள்ளது. 

 லைகா நிறுவனத்தின் புதிய திரைப்படம்:  ஹீரோ மற்றும் 2 ஹீரோயின்கள் யார் யார்

தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் பல பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து வருகிறது என்று தெரிந்தது. குறிப்பாக மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'பொன்னியின்

'பதான்', 'பகாசூரன்' உள்பட இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள்.. முழு விபரங்கள்..!

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் நான்கு முதல் ஆறு படங்கள் வரை ரிலீஸ் ஆகி வரும் நிலையில் திரையரங்களில் ரிலீஸான திரைப்படங்கள் ஒவ்வொரு வாரமும் ஓடிடியிலும் ரிலீஸ் ஆகி