சட்டமன்ற கூட்டத்தை கட் அடித்துவிட்டு குத்தாட்டம் ஆடிய எம்.எல்.ஏ
- IndiaGlitz, [Wednesday,November 15 2017]
கர்நாடக மாநிலத்தில் தற்போது சட்டமன்ற கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் திரைப்படம் ஒன்றின் இசை வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டு அந்த விழாவில் குத்தாட்டம் ஆடியதாக எம்.எல்.ஏ ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுக்கு ஆளானவர் அம்பரீஷ் என்ற காங்கிரஸ் எம்.எல்.ஏதான். இவர் நேற்று நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரை கட் அடித்துவிட்டு பெங்களூரில் நடைபெற்ற திரைப்படம் ஒன்றின் இசை வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டார்
இந்த விழாவில் ஒரு கட்டத்தில் எம்.எல்.ஏ அம்பரீஷ், பெண்களுடன் கைகோர்த்து சிறிது நேரம் நடனம் ஆடினார். இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. தன்னை எம்.எல்.ஏவாக தேர்வு செய்த மக்களின் பிரச்சனைகளை சட்டமன்றத்தில் பேசாமல் குத்தாட்டம் ஆடிய எம்.எல்.ஏவுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.