மங்களூரில், மருத்துவமனையிலிருந்த கொரோனா நோயாளி தப்பி ஓட்டம்..!

துபாயிலிருந்து பயணி ஒருவர் மங்களூர் விமான நிலையம் வந்திருந்த போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு காயச்சல், இருமல் இருந்தது தெரியவர அதிகாரிகள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பினர்.       

ஞாயிற்றுக்கிழமை துபாயிலிருந்து திரும்பியவுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் இன்று காலை மருத்துவமனையில் இருந்து அவர் தப்பிவிட்டார். அவரை காவல்துறையானது தேடிக்கொண்டு உள்ளது.

மங்களூர் சுகாதாரத்துறை அதிகாரி கூறுகையில் காவல்துறையும் மருத்துவர்களும் தப்பி போனவரின் வீட்டுக்கு அருகில் முகாமிட்டு அமர்ந்திருக்கின்றனர் என்றார். ஆனால் அறிகுறிகள் இருந்தாலும் அவருக்கு கொரோணா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதா என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. ஒருவேளை பரிசோதனையில் அவருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டால் அவர் இப்போது எங்கு இருக்கிறார் என தெரியாமல் மற்றவருக்கு பரவாமல் தடுப்பது என்பது கடினம்.