ஹிஜாப் தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அதிரடி தீர்ப்பு!
- IndiaGlitz, [Tuesday,March 15 2022]
கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பள்ளி கல்லூரிகளில் மாணவிகள் சிலர் ஹிஜாப் அணிந்து வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து கல்வி நிலையங்களில் ஹிஜாப் உள்பட மத அடையாளங்களுடன் கூடிய உடைகள் அணிய தடை என கர்நாடக அரசு அரசாணை ஒன்றை பிறப்பித்தது.
இந்த அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த சில நாட்களாக வாதம் பிரதிவாதம் நடந்த நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இன்றைய தீர்ப்பில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை என கர்நாடக அரசு விதித்த அரசாணை செல்லும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும் ஹிஜாப் என்பது இஸ்லாமிய மதத்தின் அடிப்படை அவசியம் கிடையாது என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்ட அரசாணைக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுவதாக கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளது. இந்த தீர்ப்பால் கர்நாடக மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக இன்று இந்த தீர்ப்பு வெளியாவதை அடுத்து கர்நாடக மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.