நித்தியானந்தாவை கண்டுபிடிக்க நீதிமன்றம் கெடு: அதிர்ச்சியில் போலீசார்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பெங்களூரு நித்யானந்தா ஆசிரமத்தில் பாலியல் பலாத்காரங்கள் நடப்பதாக வந்த குற்றச்சாட்டை அடுத்து போலீசார் இதுபற்றி விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில் நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து திடீரென வெளியேறி வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டதாக கூறப்பட்டது
அதுமட்டுமின்றி ஈக்வடார் நாட்டில் உள்ள ஒரு தீவை விலைக்கு அவர் வாங்கி இருப்பதாகவும், அந்த தீவுக்கு கைலாஷ் என்று பெயரிட்டு தனி நாடாக அறிவித்து, அந்த நாட்டில் குடியுரிமை பெற விரும்புவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த நாட்டில் குடியேற 10 லட்சம் பேர் வரை ஆன்லைனில் விண்ணப்பிததாகவும் கூறப்பட்டது
இந்த நிலையில் நித்தியானந்தாவை தேடும் பணியில் கர்நாடகப் போலீசார் ஈடுபட்டு வந்தனர். அவர் நேபாளம் வழியாக வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்று கூறப்பட்டதை அடுத்து இன்டர்போல் போலீசாரை தொடர்பு கொண்டு அவரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது
இந்த நிலையில் இது குறித்த வழக்கு ஒன்று கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின்போது நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என டிசம்பர் 18-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கர்நாடக போலீசாருக்கு கர்நாடக மாநில உயர் நீதிமன்றம் இறுதி கெடு விதித்து உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவால் கர்நாடக போலீசார் அதிர்ச்சியில் உள்ளனர். கர்நாடக உயர் நீதிமன்றம் கொடுத்த கெடு முடிய இன்னும் 6 நாட்களே இருப்பதால் அதற்குள் நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என்பதை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டிய நெருக்கடியில் போலீசார் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout