சாலையில் வாகனங்கள் சென்றால் பறிமுதல்: அரசின் அதிரடியால் பரபரப்பு

கொரோனா வைரஸ் மிகத்தீவிரமாக இந்தியாவில் பரவி வருவதன் காரணமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு என மத்திய அரசு அறிவித்தது. இதனை அடுத்து கடந்த ஒரு வாரமாக தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் சிலர் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். மேலும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் பலர் காய்கறி மற்றும் மளிகை கடைகளிலும் இருப்பதாகவும் புகைப்படத்துடன் கூடிய செய்திகள் வெளிவந்து அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் கர்நாடக மாநில அரசு அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. இதன்படி மாநிலம் முழுவதும் சாலைகளில் எந்த வாகனங்களும் செல்ல கூடாது என்றும், மீறி இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் செல்பவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் பொதுமக்கள் நடந்து சென்று தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களை வாங்கி கொள்வதில் எந்தவித தடையும் இல்லை என்றும் அரசு அறிவுறுத்தி உள்ளது இதனால் பொது மக்களின் நடமாட்டம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடக மாநிலத்தின் இந்த வழிமுறையை தமிழகம் உள்பட இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்றும் பொது மக்களை வீட்டுக்குள் ஏப்ரல் 14ஆம் தேதி வரை முடக்கி வைப்பது ஒன்றே கொரோனா வைரசை ஒழிப்பதற்கான ஒரே தீர்வு என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

More News

இரண்டாம் உலகப்போருக்குப்பின் உலகம் சந்திக்கும் மிகப்பெரிய அபாயம்!!! ஐ.நா. தலைவர் கருத்து!!!

கொரோனா நோய்த்தொற்று பரவலினால் உலகம் சந்தித்த கடும்பொருளாதார தாக்கம் குறித்து அறிக்கையை வெளியிட்ட ஐ.நா. சபையின் தலைவர் அன்டோனியா குட்டரஸ்

வெளிமாநில தொழிலாளர்களை தூண்டிவிடும் போலி போராளிகள்: முதல்வர் ஆவேசம்

கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாகி கொண்டே வருவதால் முதலமைச்சர், அமைச்சர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர்

கொரோனா தடுப்பு நிதி: ராமோஜிராவ் பிலிம்சிட்டி சேர்மன் கொடுத்த மிகப்பெரிய தொகை

இந்தியா முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை தடுக்க மத்திய மாநில அரசுகள் அதீத முயற்சியுடன் போராடி வருகின்றன என்பது தெரிந்ததே

சென்னையில் விசா வாங்க வந்தவருக்கு கொரோனா: 100க்கும் மேற்பட்டவர்களை தேடும் போலீஸ்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள விசா மையத்திற்கு மார்ச் 15ஆம் தேதி விசா வாங்க வந்த ஒருவருக்கு தற்போது கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அந்த தேதியில்

டெல்லி மாநாட்டில் இருந்து திரும்பிய மேலும் இருவருக்கு கொரோனா!

டெல்லியில் கடந்த மார்ச் 13 முதல் 15 வரை நடைபெற்ற மத மாநாட்டில் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட நிலையில்