மரணத்திற்கு பின் புனித் ராஜ்குமாருக்கு கிடைத்த மிகப்பெரிய விருது!
Send us your feedback to audioarticles@vaarta.com
கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் அவர்கள் சமீபத்தில் திடீரென மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்த நிலையில், அவரது மரணத்துக்குப் பிறகு மிகப்பெரிய விருது அவருக்கு அளிக்கப்படுவதாக கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்கள் தெரிவித்துள்ளார்.
இன்று பெங்களூரில் கர்நாடக திரைப்பட வர்த்தக சபை சார்பில் நடிகர் புனித் ராஜ்குமாருக்கு புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை அவர்கள் ’புனித் ராஜ்குமார் அவர்களை கெளரவிக்க பல ஆலோசனைகள் கூறப்படுகின்றன என்றது குறிப்பாக தேசிய விருது அளிப்பது குறித்து பரிந்துரை செய்யப்படும் என்றும் அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக அரசின் ‘கர்நாடகா ரத்னா’ என்ற விருது அளிக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாகவும் இங்கு இதனை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் மேலும் ராஜ்குமார், அவரது மனைவி பர்வதம்மாள் மற்றும் புனித் ராஜ்குமார் நினைவிடங்கள் மேம்படுத்தப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். கர்நாடக மாநிலத்தின் மிகப்பெரிய விருதான ’கர்நாடக ரத்னா’ என்ற விருதை பெறும் பத்தாவது நபர் புனித் ராஜ்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் புனித் ராஜ்குமாருக்கு பத்மஸ்ரீ விருது வழங்க வேண்டுமென்றும் அதற்கான பரிந்துரையை மத்திய அரசுக்கு மாநில அரசு வழங்க வேண்டும் என்றும் கர்நாடக மாநில எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா அவர்கள் கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புனித் ராஜ்குமாரின் சகோதரர் சிவராஜ்குமார் அவர்கள் புனித் ராஜ்குமார் பெயரில் திரைப்படக் கல்லூரி தொடங்க கர்நாடக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ಕನ್ನಡನಾಡಿನ ಜನಪ್ರಿಯ ಕಲಾವಿದ ದಿವಂಗತ ಶ್ರೀ ಪುನೀತ್ ರಾಜಕುಮಾರ್ ಅವರಿಗೆ ಮರಣೋತ್ತರ ಕರ್ನಾಟಕ ರತ್ನ ಪ್ರಶಸ್ತಿ ನೀಡಿ ಗೌರವಿಸಲು ರಾಜ್ಯ ಸರ್ಕಾರ ತೀರ್ಮಾನಿಸಿದೆ.
— Basavaraj S Bommai (@BSBommai) November 16, 2021
State Government has decided to honour late Sri #PuneethRajukumar with Karnataka Ratna award posthumously.#KarnatakaRatna
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments