கர்நாடக தேர்தல் களத்தில் ராகுல் டிராவிட்டுக்கு தேடி வந்த பதவி

  • IndiaGlitz, [Wednesday,March 28 2018]

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் தேர்தலில் போட்டியிட்டு பல்வேறு பதவிகளை பெற்றுள்ளனர். இந்த நிலையில் இந்திய அணியின் சுவர் என்று அழைக்கப்படும் ராகுல் டிராவிட்டுக்கு கர்நாடக மாநில தேர்தல் ஆணையம் நல்லெண்ண தூதர் பதவியை அளித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் வரும் மே மாதம் 12ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அம்மாநிலத்தில் உள்ள பொதுமக்களுக்கு தேர்தல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வாக்களிப்பதன் அவசியத்தை எடுத்து கூறவும் பிராண்ட் அம்பாசிடராக ராகுல் டிராவிட்டை தேர்தல் ஆணையம் நியமனம் செய்துள்ளது.

ஏற்கனவே கர்நாடக மாநில போக்குவரத்து காவல்துறையினர் தலைக்கவசம் அணியவேண்டியதன் அவசியம் குறித்து எடுத்த ஒரு ஆவணப்படத்தில் ராகுல் டிராவிட் நடித்திருந்தார். இந்த ஆவணப்படம் வாகன ஓட்டிகளிடம் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தியதை அடுத்து தற்போது தேர்தல் ஆணையம் அவரை தூதராக நியமனம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சகோதரருடன் உறவு கொண்டு குழந்தை பெற்ற பெண் கைது

அமெரிக்காவில் உள்ள புளோரிடோ மாகாணத்தை சேர்ந்த 33 வயது பெண் ஒருவர் தன் உடன்பிறந்த சகோதரருடன் செக்ஸ் உறவு கொண்டு குழந்தை பெற்றதாக கைது செய்யப்பட்டுள்ளார்

ஜோதிகாவை அடுத்து நயன்தாராவுக்கு கிடைக்கும் வாய்ப்பு

ஜோதிகாவை அடுத்து நயன்தாராவும் பாலிவுட் பட ரீமேக் ஒன்றில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

பாலிவுட்டுக்கு செல்கிறது பிக்பாஸ் ஜோடிகளின் திரைப்படம்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருமே தற்போது திரையுலகில் நல்ல வாய்ப்புகளை பெற்று முன்னேறி வருகின்றனர்.

சினேகனுடன் ஜோடி சேரும் ஓவியா! கட்டிப்பிடி வைத்தியம் இருக்குமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சத்துக்கு சென்றவர் ஓவியா. இந்த நிகழ்ச்சியின் மூலம் பல வருடங்கள் திரையுலகில் இருந்தவர்களுக்கு கிடைக்காத புகழ், ஓவியாவுக்கு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி விஜய்க்கு கிடைத்த 'மெர்சலான' வெற்றி

கோலிவுட் திரையுலகில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 200க்கும் அதிகமான திரைப்படங்கள் வெற்றி பெற்ற போதிலும் ஒருசில படங்கள் மட்டுமே அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்து வெற்றிப்படமாகிறது.