கர்நாடக தேர்தலில் ஆட்சியை பிடிப்பது யார்? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின் முடிவு
Send us your feedback to audioarticles@vaarta.com
கர்நாடக மாநிலத்தில் இன்று நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 70% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. இந்த நிலையில் தேர்தலுக்கு பின்னர் நடைபெற்ற கருத்துக்கணிப்பில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது.
கர்நாடக தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் கட்சி 106-118 இடங்களை பிடிக்கும் என்றும் பாஜக 79 முதல் 92 இடங்களை பிடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் இந்தியா டுடே கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.
ஆனால் அதே நேரத்தில் நியூஸ் எக்ஸ் என்ற செய்தி நிறுவனம் காங்கிரஸ் கட்சிக்கு 72-78 தொகுதிகள் கிடைக்கும் என்றும், பாஜகவுக்கு 102-110 இடங்களை பிடிக்கும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது.
அதேபோல் டைம்ஸ் நவ் எடுத்த கருத்துக்கணிப்பின்படி காங்கிரஸ் 90-103 இடங்களும், பாஜக 80-93 இடங்களும், ஜேடிஎஸ் 31-39 இடங்களும் மற்றவை 2-4 இடங்களையும் பிடிக்கும் என கணித்துள்ளது.
கர்நாடகாவில் ஆட்சி அமைக்க 113 இடங்கள் தேவை என்ற நிலையில் ஆட்சியை பிடிக்க போவது யார் என்பதை வரும் 15ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது தெரியவரும்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout